நேசமணி ஆப்பு வைத்தது 'அவருக்கு' மட்டும் அல்ல 'இவருக்கும்' தான்

By Siva

Recommended Video

NGK Movie: Surya CutOut Removed: திருத்தணியில் 220 அடி உயர சூர்யா கட் அவுட் அகற்றப்பட்டது- வீடியோ

சென்னை: நேற்று ஒரே நாளில் நேசமணி இரண்டு பேருக்கு ஆப்பு வைத்துவிட்டார்.

நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் ட்விட்டரில் மோடியை கான்டிராக்டர் நேசமணி தோற்கடித்துவிட்டார்.

பாகுபலி படத்தில் பல்லா பதவியேற்றபோது மக்கள் பாகுபலியின் பெயரைச் சொல்லி அசிங்கப்படுத்திய காட்சியை வைத்து மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்தனர். நாள் முழுவதும் உலக அளவில் நேசமணி டிரெண்டாகி மோடியின் பதவியேற்பு ட்வீட்டுகளை இருட்டடிப்பு செய்துவிட்டார்.

 நேசமணி

நேசமணி

உயிரே இல்லாத நேசமணியால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மோடிக்கு ட்விட்டரில் தோல்வி ஏற்பட்டது. நேற்று மோடிக்கு மட்டும் அல்ல நந்த கோபாலன் குமரனுக்கும் ட்விட்டரில் சிக்கல் ஏற்பட்டது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்.ஜி.கே. படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

என்.ஜி.கே.

நேற்று என்.ஜி.கே. படம் குறித்து போடப்பட்ட ட்வீட்டுகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதற்கு காரணம் நம் கான்டிராக்டர் நேசமணி. சூர்யா ரசிகர்கள் ரூ. 6 லட்சம் செலவு செய்து திருத்தணியில் 215 அடியில் வைத்த கட்அவுட்டையும் நேசமணியை வைத்து நாசமாக்கிவிட்டனர். நேற்று என்.ஜி.கே. பற்றி பேச்சு எழுந்தது. அது எதற்கு என்றால் நேசமணியை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான சந்துரு தன் பெயர் நந்த கோபாலன் குமரன் என்றும், நேசமணி யார் என்றே தெரியாது என்றும் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார் என்று நெட்டிசன்கள் கலாய்த்தனர். மேலும் என்.ஜி.கே. படத்தில் சூர்யாவை தூக்கிச் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு நேசமணி வழக்கில் சந்துரு கைது என்று பிரேக்கிங் நியூஸ் எல்லாம் போட்டார்கள்.

 கான்டிராக்டர்

கான்டிராக்டர்

என்.ஜி.கே. படத்திற்கு விளம்பரம் தேட முடியாத அளவுக்கு நேசமணி ட்விட்டரை ஆக்கிரமித்துக் கொண்டார். அதிக ட்வீட் போட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் கில்லாடிகளான சூர்யா ரசிகர்களாலேயே நேசமணியை ஒன்றும் செய்ய முடியவில்லை. எப்படியோ தன் தலையில் சுத்தியல் விழுந்த வழக்கில் தப்பித்த சந்துருவுக்கு நேசமணி நேற்று நல்ல பரிசு கொடுத்துவிட்டார்.

 தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

என்.ஜி.கே. படத்தை பார்த்த சூர்யா ரசிகர்கள் ஒரு மாதிரியாகவும், மற்றவர்கள் வேறு மாதிரியாகவும் பேசிக் கொள்கிறார்கள். இதற்கிடையே இந்த தமிழ் ராக்கர்ஸ் படம் ரிலீஸான சூடோடு அதை கசியவிட்டுவிடுமோ என்ற கவலையில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X