Exclusive: அப்பலோவில் நேசமணி 2 இட்லி, கலக்கி சாப்பிட்டார்
Recommended Video
சென்னை:ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நேசமணி இரண்டு இட்லி, கலக்கி சாப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணமூர்த்தி கையில் இருந்த சுத்தியல் கான்டிராக்டர் நேசமணி தலையில் விழுந்ததால் அவர் சுயநினைவை இழந்தார். இதையடுத்து சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேசமணி விரைவில் குணமடைய தமிழக மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
சிகிச்சை செலவு
நேசமணியின் சிகிச்சை செலவை தானே ஏற்றுக் கொள்வதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளாராம்.
முன்னாள் முதல்வர்
நேசமணியின் தந்தை முன்னாள் தமிழக முதல்வர் என்பதும், தமிழகத்தை டெல்லிக்கு அருகில் கொண்டு செல்ல திட்டமிட்டவர் என்பதும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
என்.ஜி.கே.
நேசமணியை இந்த நிலைக்கு ஆளாக்கிய சந்துரு போலீசிடம் சிக்கினார். ஆனால் விசாரணையில் தனது பெயர் நந்த கோபாலன் குமரன் என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்
நேசமணி கான்டிராக்டர் ஆகும் முன்பு கிரிக்கெட் வீரராக இருந்தார்.
அறிக்கை
நேசமணியின் உடல்நலம் நன்றாக உள்ளது. அவர் 2 இட்லி, கலக்கி சாப்பிட்டார் என்று கலாய்த்துள்ளனர்.
பிற மாநில மக்கள்
தமிழக மக்கள் நேசமணிக்காக பிராத்தனை செய்ய பிற மாநில மக்கள் நடப்பது புரியாமல் உள்ளனர். ஃபேக்ட்டு, ஃபேக்ட்டு.


Click it and Unblock the Notifications











