நெஸ் வாடியா வாழ்வில் இன்னொரு நடிகை: பொறாமையால் ப்ரீத்தி ஜிந்தா புகார் கொடுத்தாரா?
சென்னை: நெஸ் வாடியா தற்போது வேறு ஒரு நடிகையை காதலிப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார் என்று நெஸ்ஸின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும், வாடியா குழுமத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் நெஸ் வாடியாவும் 5 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து கிங்ஸ் XI பஞ்சாப் அணியை வாங்கினர்.
இந்நிலையில் காதல் கசந்து பிரிந்துவிட்டனர்.

நெஸ்
ப்ரீத்தியை பிரிந்த நெஸ் வாடியா மாடலாக இருந்து நடிகையான ஒருவரை பார்த்து காதலில் விழுந்தார். அவருக்கு வேறு காதலி கிடைத்தது ப்ரீத்தியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று நெஸ்ஸின் நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

முயற்சி
முறிந்துபோன உறவை புதுப்பிக்க ப்ரீத்தி ஜிந்தா முயற்சி செய்தார். ஆனால் நெஸ் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்றை ப்ரீத்தியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நெஸ்ஸின் வாழ்வில் புதிய நபர் இருப்பது ப்ரீத்திக்கு பொறாமை என்றார் அந்த நபர்.

புதிய காதலி
நெஸ்ஸின் புதிய காதலி தனது நீண்ட கால காதலருடனான நிச்சயதார்த்தத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உடைத்துள்ளார்.

காதலர்
ப்ரீத்தி தனது வாழ்வில் புதிதாக ஒருவர் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் யார் என்பதை அவர் கூறவில்லை. இதன் மூலம் ப்ரீத்திக்கு புதிய காதலர் கிடைத்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.

பொறாமையாலா?
ப்ரீத்தி நெஸ் மீது உள்ள பொறாமையால் தான் அவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளதாக வாடியாவின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











