கதவ சாத்தட்டா.. ஸ்ருதிஹாசன் லிப் லாக்.. அமலா பால் ஹாட்னஸ்.. தெறிக்குது பிட்ட கதலு டிரைலர்!

ஹைதராபாத்: டோலிவுட் இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாகி உள்ள நெட்பிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படமான பிட்ட கதலு டிரைலர் வெளியாகி உள்ளது.

அமலா பால், ஸ்ருதிஹாசன், லக்‌ஷ்மி மஞ்சு, ஈஷா ரெப்பா, ஜகபதி பாபு, அஸ்வின் காக்காமனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

4 தனிக் கதைகளை இயக்குநர்கள் நாக் அஸ்வின், நந்தினி ரெட்டி, சங்கல்ப் ரெட்டி மற்றும் தருண் பாஸ்கர் இயக்கியுள்ளனர்.

நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி

நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி

சர்வதேச நாடுகளில் ஆந்தாலஜி படங்களை உருவாக்கி ஹிட் அடித்து வந்த நெட்பிளிக்ஸ், இந்தியாவிலும் ஆந்தாலஜி படங்களை தயாரித்து வருகிறது. லஸ்ட் ஸ்டோரீஸ், பாவக் கதைகள் வரிசையில் தற்போது பிட்ட கதலு ஆந்தாலஜி படம் வரும் பிப்ரவரி 19ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

பிட்ட கதலு டிரைலர்

பிட்ட கதலு டிரைலர்

இந்தியை தொடர்ந்து தெலுங்கு வெர்ஷன் லஸ்ட் ஸ்டோரீஸ் உருவாகி உள்ளது, பிட்ட கதலு என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த ஆந்தாலஜியின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. அமலா பால், ஸ்ருதிஹாசன், லக்‌ஷ்மி மஞ்சு, ஈஷா ரெப்பா, ஜகபதி பாபு, அஸ்வின் காக்காமனு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

ராமுலா

ராமுலா

தேசிய விருது இயக்குநர் தருண் பாஸ்கர் இயக்கத்தில் லக்‌ஷ்மி மஞ்சு லீடு ரோலில் நடித்துள்ள ராமுலா எனும் கதை பெண்கள் பாலியல் போராட்டங்களில் இருந்து வெடித்து எழுந்து, அரசியலில் களம் காணும் கதையை கருவாக கொண்டு இருப்பதாக டிரைலர் மூலம் கணிக்கப்படுகிறது. கண்ணாடி போட்டுக்கிட்டு லக்‌ஷ்மி மஞ்சு செம கெத்து காட்டுகிறார்.

மீராவான அமலா பால்

மீராவான அமலா பால்

ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் நடிப்பை ரசிகர்கள் இந்த பிட்ட கதலு ஆந்தாலாஜியில் உள்ள மீரா கதையில் கண்டு ரசிக்கலாம். மீரா எனும் டைட்டிலில் உள்ள இந்த கதையில் அமலா பாலுடன் பிரபல வில்லன் நடிகர் ஜகபதி பாபு நடித்துள்ளார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அஸ்வின் காக்கமனு அமலா பாலுடன் வேற லெவல் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளன. இந்த கதையை நந்தினி ரெட்டி இயக்கி உள்ளார்.

ஸ்ருதிஹாசன் லிப் லாக்

ஸ்ருதிஹாசன் லிப் லாக்

அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புது காலை ஆந்தாலஜியில் நடித்து அசத்திய ஸ்ருதிஹாசன், நெட்பிளிக்ஸில் உருவாகியுள்ள எக்ஸ் லைஃப் கதையில் லிப் லாக் முத்தமெல்லாம் கொடுத்து இளைஞர்களை சூடேற்றுகிறார். நடிகையர் திலகம் படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வின் டெக்னாலஜியை எல்லாம் பயன்படுத்தி இந்த கதையை உருவாக்கி உள்ளார். டிரைலரின் இறுதியில் கதவ சாத்தட்டா என தெலுங்கில் ஸ்ருதிஹாசன் பேசும் வசனம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

பிங்கி

பிங்கி

இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் நடிகை ஈஷா ரெப்பா, சத்யதேவ் கஞ்சரானா, ஸ்ரீனிவாஸ் அவசராலா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள பிங்கி கதையும் டிரைலரில் இடம்பெற்று உள்ளது. பெண்களின், காமம், காதல், ஆசை, லட்சியம் என பல்வேறு விஷயங்களை இந்த பிட்ட கதலு ஆந்தாலஜி வெளிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லஸ்ட் ஸ்டோரிஸ் அளவுக்கு இருக்குமா?

பாலிவுட்டில் இயக்குநர் கரண் ஜோஹர், அனுராக் கஷ்யப் உள்ளிட்டோர் இணைந்து இயக்கிய லஸ்ட் ஸ்டோரீஸ் அளவுக்கு பிட்ட கதலு இருக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. டோலிவுட் என்பதால், மசாலா தான் தூக்கலாக இருக்கும் என்கிற விமர்சனங்களை இந்த பிட்ட கதலு முறியடித்து முடி சூடுகிறதா என்பதை பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X