twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெட்கமா இல்லை.. சிறுமிகளை வைத்து ஆபாச படமா? விளாசிய நெட்டிசன்கள்.. மன்னிப்பு கேட்ட நெட்பிளிக்ஸ்

    |

    பாரீஸ்: பிரெஞ்சு படமான 'Cuties' க்கு எதிராக நெட்டிசன்கள் ஆரம்பித்த கையெழுத்து இயக்கம் காரணமாக நெட்பிளிக்ஸ் பகிரங்க மன்னிப்பு கோரி உள்ளது.

    Recommended Video

    Kannum Kannum Kollaiyadithaal On Netflix | Dulquer Salman | Desingh Periyasamy

    உலகளவில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் விளங்கி வருகிறது.

    11 வயது சிறுமிகளை வைத்து, பாலியல் ரீதியாக எடுத்துள்ள அந்த படத்திற்கு எதிராக 49 ஆயிரம் பேர் கையெழுத்துப் போட்டுள்ளனர்.

    பிரெஞ்சு படம்

    பிரெஞ்சு படம்

    பிரெஞ்சு இயக்குநர் மைமோனா டக்குவேர் (Maïmouna Doucouré) இயக்கியுள்ள Cuties என்ற படம் வரும் செப்டம்பர் 9ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. 11 வயது இளம் சிறுமி தனது குடும்பத்தை எதிர்த்து, வெளியே வந்து நடன குழு ஒன்றில் இணைந்து தனது வாழ்க்கையை நடத்துவது போல இந்த படம் உருவாகி உள்ளது.

    சன்டேன்ஸ் விருது

    சன்டேன்ஸ் விருது

    சன்டேன்ஸ் விருது விழாவில் திரையிடப்பட்ட இந்த படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை மைமோனா தட்டிச் சென்றார். திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் சூழ்நிலையில், இந்த படத்தை உலகம் முழுக்க வெளியிட நெட்பிளிக்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளார் சமீபத்தில், இந்த படம் தொடர்பான ஒரு விளம்பர போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    49 ஆயிரம் பேர் எதிர்ப்பு

    49 ஆயிரம் பேர் எதிர்ப்பு

    சிறுவர்களின் பாலியல் வாழ்க்கையை இந்த படம் பெரிய அளவில் காட்டி இருப்பது மிகவும் தவறான விஷயம் என்றும், இது பல சிறுவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் Change.Org அமைப்பு வெளியிட்ட விண்ணப்பட கடிதத்தில் கிட்டத்தட்ட 49 ஆயிரம் பேர் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கையெழுத்திட்டுள்ளனர்.

    மன்னிப்பு கேட்ட நெட்பிளிக்ஸ்

    மன்னிப்பு கேட்ட நெட்பிளிக்ஸ்

    பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததை உணர்ந்த நெட்பிளிக்ஸ் அதிகாரிகள், உடனடியாக சர்ச்சையை கிளப்பிய அந்த போஸ்டரை நீக்கி உள்ளனர். மேலும், விருது பெற்ற இந்த படத்தை திரையிடுவதை நிறுத்த முடியாது என்றும், சர்ச்சையை உருவாக்கிய அந்த போஸ்டருக்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறி உள்ளனர்.

    ரசிகர்கள் ஏமாற்றம்

    ரசிகர்கள் ஏமாற்றம்

    நெட்பிளிக்ஸ் படத்திற்காக மன்னிப்பு கேட்காமல், அந்த ஆர்ட் ஒர்க் போஸ்டருக்கு மட்டுமே மன்னிப்பு கேட்டு, அதை மட்டுமே நீக்க முன் வந்திருப்பது ரசிகர்களை ஏமாற்றும் செயல் என பலரும் கொந்தளித்து வருகின்றனர். அந்த படத்தை ரிலீஸ் செய்வதையே நெட்பிளிக்ஸ் கை விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    English summary
    Netflix apologizes after the netizens disgusted for the upcoming French movie promotion art work poster contains child sexualize.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X