Vidaamuyarchi: அஜித் ரசிகர்களுக்கு செம அப்டேட் கொடுத்த விடாமுயற்சி டீம்.. ஓடிடி உரிமம் விற்றாச்சு!
சென்னை: அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் முதலில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக கூறப்பட்டது. அதன் பின்னர் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல், ஒத்திவைக்கப்பட்டது. இப்படியான நிலையில், விடாமுயற்சி படம் குறித்த சூப்பரான அப்டேட் ஒன்றினை படக்குழு தெரிவித்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
அஜித்குமார், த்ரிஷா,அ ர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்தப் படத்தினை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் ஹாலிவுட் படமான, பிரேக் டவுன் படத்தின் ரீ மேக் எனக் கூறப்படுகின்றது. இப்படியான நிலையில், படத்தினை முதலில் படக்குழுவினர், பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்தனர். இதனால் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட அஜித்குமாரின் மற்றொரு படமான குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனது. ஆனால், கடைசியில் விடாமுயற்சி படமும் ரிலீஸ் ஆகவில்லை.

இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் மன வருத்தத்திற்கு ஆளானார்கள். பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் இதுவரை படக்குழு அறிவிக்கவில்லை. அதேநேரத்தில் படத்தின் ரிலீஸ்க்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை என்றதும், பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்த பல படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின. இதனால் விடாமுயற்சி படம் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடைபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

ஓடிடி: இப்படியான நிலையில் படத்தின் ஓடிடி உரிமத்தினை படக்குழு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. படம் நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு பிடித்துப்போனதால், படத்தின் ஓடிடி உரிமத்தை பல கோடிகளுக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய வெர்ஷன்களுக்கான அனைத்து உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம், வாங்கியுள்ளது.

டீசர்: இது தொடர்பாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் நெட்பிளிக்ஸ் பண்டிகை எனவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் படக்குழு வெளியிட்ட பாடலும் இணையத்தில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.

கார் ரேஸ்: இதற்கிடையில் அஜித்குமார் தனது அணியுடன் கார் ரேஸில் கலந்து கொண்டு, மூன்றாவது இடத்தினை வென்றது. இது இந்தியா முழுவதும் முக்கியச் செய்தியாக மாறியது. அவருக்கு அரசியல் பிரபலங்கள் தொடங்கி, சினிமா நட்சத்திரங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஏற்கனவே பொங்கலுக்கு வெளியாகவிருந்த குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு தெரிவித்துள்ளது. அதாவது படத்தினை தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.



Click it and Unblock the Notifications











