மெர்சல், நேர்கொண்ட பார்வை, பிகில் போஸ்டர்களின் மன்னன்.. இப்போ பாலிவுட்டுக்கு பறந்துட்டாரு!
சென்னை: கோலிவுட்டின் பிரபல போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா தற்போது பாலிவுட் இயக்குநர்களின் நெட்பிளிக்ஸ் படைப்பான கோஸ்ட் ஸ்டோரிஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசைன் செய்துள்ளார்.
அனுராக் கஷ்யாப் உள்பட 4 இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள கோஸ்ட் ஸ்டோரிஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டில் மெர்சல், நேர்கொண்ட பார்வை, பிகில் உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்களின் போஸ்டர்களை டிசைன் செய்த கோபி பிரசன்னா தான் இந்த போஸ்டரையும் டிசைன் செய்துள்ளார். அவருக்கு ட்விட்டரில் ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கோஸ்ட் ஸ்டோரிஸ்
நெட்ஃபிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் தொடர் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தற்போது, அனுராக் கஷ்யாப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள 4 பேய்க் கதைகளை கொண்ட கோஸ்ட் ஸ்டோரிஸ் விரைவில் வெளியாகிறது. அதன் போஸ்டர் டிசைன் தற்போது ரிலீசாகியுள்ளது.
கோலிவுட் போஸ்டர் கிங்
ராஜா ராணி, தெறி, விக்ரம் வேதா, துருவ நட்சத்திரம், மெர்சல், நேர்கொண்ட பார்வை, சூரரைப் போற்று, சூப்பர் டீலக்ஸ், கேம் ஓவர், 96, சர்கார், விவேகம், இறுதிச்சுற்று, காற்று வெளியிடை என பல பிளாக்பஸ்டர் படங்களின் தெறிக்கவிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை உருவாக்கியவர் கோபி பிரசன்னா.
சிறந்த போஸ்டர்
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியளவில் சிறந்த டாப் 3 போஸ்டர் டிசைன்களில் கோபி பிரசன்னாவின் சூப்பர் டீலக்ஸ் போஸ்டரும் இடம்பிடித்துள்ளது.
பாலிவுட் பயணம்
சூப்பர் டீலக்ஸ் போஸ்டர் கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த போஸ்டர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள நிலையில், பாலிவுட் இயக்குநர்கள் இயக்கியுள்ள கோஸ்ட் ஸ்டோரிஸ் போஸ்டர் செய்யும் வாய்ப்பு கோபி பிரசன்னாவிற்கு கிடைத்துள்ளது. கிடைத்த வாய்ப்பை சும்மா விடுவாரா.. அட்டகாசமான ஒரு போஸ்டரை டிசைன் செய்து அசத்தியுள்ளார்.
தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக்
தெறி, மெர்சல், சர்கார், பிகில் என தொடர்ந்து தளபதி விஜய் படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்து வரும் கோபி பிரசன்னா தான் தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக்கையும் உருவாக்கி வருகிறார் என தெரிகிறது. வரும் புத்தாண்டுக்கு தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மரண மாஸாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











