ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல மொத்தம் 18 தமிழ்படங்கள்.. வாங்கிக்குவித்த நெட்பிளிக்ஸ் !
சென்னை : 2023ம் ஆண்டு வெளியாக உள்ள பல தமிழ் திரைப்படங்களை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. இதுதொடர்பான படங்களின் லிஸ்டையும் ஓடிடி நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.
ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல மொத்தம் 18 தமிழ்படங்கள்.. வாங்கிக்குவித்த நெட்பிளிக்ஸ் ஒடிடி நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த ஆண்டு பல டாப் நடிகர்களின் படங்களில் நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.
திரையரங்குக்கு சென்று படம் பார்த்த ரசிகர்கள்,கொரோனா ஊரடங்குக்கு பிறகு ஓடிடியில் பெரும்பாலான படங்கள் வெளியானதால், வாராவாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால்,பல நிறுவனங்கள் திரைப்படங்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி வருகின்றன.

அஜித்தி 62
நடிகர் அஜித் குமார் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு படம் வெளியாகி சக்கை போடு போட்டு வரும்நேரத்தில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித் ஏகே62 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்படிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது.

வாத்தி
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் வாத்தி. இப்படம் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் வாத்தி என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் இசைவெளியீட்டுவிழா விரைவில் நடைபெற உள்ளது. இப்படத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளது.

தங்கலான்
கோலார் தங்க சுரங்கத்தில் நடிக்கும் துயரமான சம்பங்களை அடிப்படையாக கொண்டு பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் திரைப்படம் தங்கலான். இதில், மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளது.

சூர்யா 42
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42 திரைப்படம் ஃபேண்டஸி ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படமாக உருவாக உள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கடந்த மாதம் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இப்படத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளது.

மாமன்னன்
பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளது.

ஆர்யன்
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குநர் ரோகிண் வெங்கடேசன் இயக்கும் படத்தையும், விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் ஆர்யன் படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.அதே போல ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள சந்திரமுகி 2 படத்தையும் நெட்ஃபிளிக்ஸ் வாங்கிஉள்ளது.

நெட்பிளிக்ஸ் வாங்கி குவித்த படங்கள்
கார்த்திக் நடிப்பில் உருவாக் வரும் ஜப்பான் படம் ஒரு வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட திரைப்படமாகும். இப்படத்தை ராஜ்முருகன் இயக்கி வருகிறார் கார்த்திவுடன் அனு இமானுவேல் ஹீரோயின்னாக நடிக்கிறார். இப்படத்தை நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தையும்நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











