twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாகுபலி வெப்சீரிஸ்...ரூ.100 கோடியை வீணாக்கிய நெட்பிளிக்ஸ்...அதிர்ச்சியில் ராஜமவுலி

    |

    ஐதராபாத் : 2015 ம் ஆண்டு வெளியான பாகுபலி - தி பிகினிங் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து 2017 ல் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. இது உலக அளவில் மாபெரும் வசூலை பெற்றது.

    தற்போது வரலாற்று படங்கள் அதிகம் எடுக்கப்பட்டு வருவதற்கு முக்கிய காரணமே பாகுபலி படத்தின் வெற்றி தான். இந்நிலையில் பாகுபலி - பிஃபோர் தி பிகினிங் என்ற பெயரில் வெப்சீரிஸ் ஒன்றை தயாரிக்க நெட்பிளிக்ஸ் முடிவு செய்தது.

    Netflix has taken this bold step regarding the Bahubali prequel

    ரூ.100 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த வெப் சீரிஸ் தயாரிக்கப்பட்டது. ராஜமவுலி தயாரித்த இந்த படம் 9 தொடர்களாக உருவாக்கப்பட்டது. ஆனால் இதில் நெட்பிளிக்ஸ் திருப்தி அடையாததால், ரூ.200 கோடி செலவில் புதிதாக முழு தொடரையும் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

    தற்போது கதை, நடிகர்கள், தொழில்நுட்ப டீம் என அனைத்தையும் முழுவதுமாக மாற்றி, புதிதாக படப்பிடிப்பை துவங்க உள்ளனராம். ஏற்கனவே ரூ.100 கோடி முழுவதுமாக செலவிடப்பட்ட நிலையில் மேலும் ரூ.200 கோடி செலவிட்டு இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட உள்ளது.

    இதனால் வெப் சீரிசின் மொத்த செலவு ரூ.300 கோடி ஆகி உள்ளது. பாகுபலியில் ராஜமாதாவான சிவகாமியின் இளம் வயதை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் தயாரிக்கப்படுகிறது.

    English summary
    Netflix asked the makers to reshoot the entire 'Bahubali: Before The Beginning' with a 200 crore rupees budget.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X