தி க்ரே மேன் படத்தோட மேக்கிங் வீடியோ வெளியீடு.. என்னமா மிரட்டறாரு தனுஷ்!

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் இரண்டாவது ஹாலிவுட் படமாக கடந்த 22ம் தேதி நெட்பிளிக்சில் வெளியானது தி க்ரே மேன் படம்.

இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் தனுஷ். ஆனாலும் அவரது கேரக்டர் தற்போது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் தனுஷின் கேரக்டர் மற்றும் அவர் அதை வெளிப்படுத்திய விதம் படத்தின் இயக்குநர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் அடுத்தடுத்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என தனது நடிப்பை விரிவுப்படுத்திக் கொண்டுள்ளார். தன்னை தமிழ் நடிகர் என்று சொல்லாமல் இந்திய நடிகர் என்று அடையாளப்படுத்தும்படி அவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தனுஷின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. லண்டன் தாதாவாக நடித்திருந்த ஜகமே தந்திரம், பாலிவுட்டில் அவரது நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே மற்றும் சமீபத்தில் அவர் பத்திரிகையாளராக நடித்து வெளியான மாறன் என அடுத்தடுத்த படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாகின.

தி க்ரே மேன் ஹாலிவுட் படம்

தி க்ரே மேன் ஹாலிவுட் படம்

தொடர்ந்து அவர் நடிப்பில் இரண்டாவது ஹாலிவுட் படமாக நெட்பிளிக்சில் கடந்த 22ம் தேதி வெளியானது தி க்ரே மேன் படம். அவெஞ்சர்ஸ் என்ற சிறப்பான படத்தை கொடுத்திருந்த ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது. இதன் ப்ரமோஷன்களுக்காக அடுத்தடுத்து அமெரிக்கா, மும்பை என தன்னை பிசியாக வைத்துக் கொண்டார் தனுஷ்.

சிறப்பான விமர்சனங்கள்

சிறப்பான விமர்சனங்கள்

அமெரிக்காவில் நடைபெற்ற ப்ரமோஷன்களில் தன்னுடைய மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் சென்றிருந்தார். இந்தப் படத்தில் சிறிய கேரக்டரில்தான் தனுஷ் நடித்துள்ளார். ஆனால் அவரது கேரக்டர் மிகவும் மிரட்டலாக அமைந்துள்ளது. அவருக்கு சிறப்பான விமர்சனங்களையும் பெற்றுத் தந்துள்ளது.

மேக்கிங் வீடியோ வெளியீடு

படம் ஓடிடியில் வெளியாகி சில தினங்களை கடந்துள்ள நிலையில், தற்போது இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் படத்தின் சூட்டிங் நிறைவையொட்டி தனுஷிற்கு பூங்கொத்து அளிக்கப்படுகிறது. தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள சண்டைக் காட்சியின் மேக்கிங்கும் இந்த வீடியோவில் காணப்படுகிறது.

செக்ஸி தமிழ் ப்ரெண்ட் என பாராட்டு

செக்ஸி தமிழ் ப்ரெண்ட் என பாராட்டு

தொடர்ந்து படக்குழுவினர் கைத்தட்டி ஆரவாரம் செய்யும் காட்சியும் காணப்படுகிறது. நெட்பிளிக்ஸ் இந்தியா இந்த வீடியோவை தற்போது வெளிட்டுள்ளது. மேலும் செக்ஸி தமிழ் ப்ரெண்ட் என்றும் கேப்ஷனில் தெரிவித்துள்ளது. இதே செக்ஸி தமிழ் ப்ரெண்ட் என்ற வார்த்தைகளை குறிப்பிட்டே ரூசோ சகோதரர்களும் தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X