நெட்பிளிக்ஸுக்கு மட்டுமல்ல.. பொதுமக்களுக்கும் பொறுப்பு வேண்டும்.. பொழுதுபோக்கோட பொழப்பு முக்கியம்!
சென்னை: இந்தியாவில் நெட்பிளிக்ஸ் மற்றும் ஃபேஸ்புக்கின் வேகத்தை 25 சதவீதம் வரை குறைக்க வலியுறுத்தியதை அடுத்து அதன் வேகம் குறைகிறது.
Recommended Video
அல்ட்ரா ஹெச்.டி., ஹெச்.டி தரத்தில் நெட்பிளிக்ஸில் படங்களையும் தொடர்களையும், வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள் அதிகம் கண்டு களிக்கின்றனர்.

ஆனால், அதே சமயம், வீட்டில் இருந்து முக்கிய வேலைகளை செய்து வரும் பணியாளர்களுக்கு போதுமான இணைய வேகம் கிடைப்பதில்லை.
நேற்று நள்ளிரவு முதல் அடுத்த 21 நாளைக்கு, நாடே வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டிய உத்தரவு பிரதமர் மோடியால் நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மணன் கோட்டை போட்டுக் கொண்டு, வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்றும், தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு தக்க தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள், இணையத்தை பயன்படுத்தி, நெட்பிளிக்ஸ், யூடியூப், பேஸ்புக் உள்ளிட்டவற்றை பொழுது போக்குக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், வீட்டில் இருந்து பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு, இணைய வேகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருப்பவர்களுடன், பேசி, மகிழ்ந்து, ஆரோக்கியமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு பொழுது கழிக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஹை குவாலிட்டியில் படங்களை பார்ப்பதன் மூலம் அதிகளவில் இணையம் செலவாகின்றது. ஸ்டாண்டார்ட் மோடில் ஸ்ட்ரீமிங் செய்ய நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பாவை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை முதல் இந்தியாவிலும் நெட்பிளிக்ஸ் தனது வேகத்தை 25 சதவீதம் வரை குறைத்துள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு, இந்த வேகக் குறைப்பு தொடரும் என நெட்பிளிக்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலை மேலும், இக்கட்டாக மாற்றாமல், பொதுமக்களும் பொறுப்புணர்வோடு நடந்து செயல்பட்டால், கொரோனா வைரஸ் காலத்தை ஒற்றுமையுடன் கடக்கலாம்.இந்த இக்கட்டான சூழலை மேலும், இக்கட்டாக மாற்றாமல், பொதுமக்களும் பொறுப்புணர்வோடு நடந்து செயல்பட்டால், கொரோனா வைரஸ் காலத்தை ஒற்றுமையுடன் கடக்கலாம்.


Click it and Unblock the Notifications