twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் – ரஞ்சித் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம்: ஷூட்டிங் போகும் முன்பே கோடிகளில் வியாபாரம்?

    |

    சென்னை: விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம் கடந்த 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    கோப்ராவுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், விக்ரம் நடிப்பில் அடுத்து பொன்னியின் செல்வன் படம் வெளியாகிறது.

    இதனைத் தொடர்ந்து விக்ரம் தனது 61வது படத்தை பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

    மிருணாளினி ரவி கெட்டப்புல இருக்கிறதே சியான் விக்ரம் தான் தெரியுமா? எல்லை மீறும் கோப்ரா மீம்ஸ்! மிருணாளினி ரவி கெட்டப்புல இருக்கிறதே சியான் விக்ரம் தான் தெரியுமா? எல்லை மீறும் கோப்ரா மீம்ஸ்!

    விரைவில் விக்ரம் 61

    விரைவில் விக்ரம் 61

    விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன், இம்மாதம் 30ம் தேதி வெளியாகிறது. விக்ரமுடம் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் விக்ரம், விரைவில் அவரது 61வது படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார்.

    பா ரஞ்சித்துடன் கூட்டணி.

    பா ரஞ்சித்துடன் கூட்டணி.

    விக்ரமின் 61வது படத்தை பா ரஞ்சித் இயக்குகிறார். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'நட்சத்திரம் நகர்கிறது' படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம், அரசியல் ரீதியாக பல விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. நாடகக் காதல், ஆணவக் கொலை, தன்பாலின ஈர்ப்பாளர்கள், இளையராஜா இசை என சமூகத்தில் தேவையான நிறைய உரையாடல்களுக்கான வாய்ப்பை இந்தப் படம் அமைத்துக் கொடுத்துள்ளது.

    எதிர்பாராததை எதிர்பாருங்கள்

    எதிர்பாராததை எதிர்பாருங்கள்

    இந்நிலையில், விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணி முதன்முறையாக இணையும் இப்படத்தை, ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கிறது, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விக்ரம் 61 ஸ்போர்ட்ஸ் ஜானரில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் என சொல்லப்படுகிறது. அதேநேரம், இது கேஜிஎஃப் மாதிரி ஆக்சன் ஜானவில் கேங்ஸ்டர் படமாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விக்ரம் 61 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

    ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி

    ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி

    'விக்ரம் 61' படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளாது. இந்நிலையில், ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் படத்தின் ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி காணப்படுகிறதாம். முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ், விக்ரம் 61 படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்க முயற்சி செய்துவருகிறதாம். ஆனாலும், படக்குழு தரப்பி;ல் இருந்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. ரஞ்சித் இயக்கிய 'சார்பட்டா பரம்பரை' நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Pa Ranjith will direct Vikram's new film. The shooting of this hugely ambitious film will begin soon. In this case, Netflix is trying to capture the movie made by the Vikram-Ranjith alliance
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X