சூர்யா, விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு செம நியூஸ்.. நெட்பிளிக்ஸின் நவரசா ரிலீஸ் எப்போது தெரியுமா?
சென்னை: 9 தனித் தனி கதைகள் கொண்ட ஆந்தாலஜி வெப் படமான நவரசா வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.
நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் தமிழில் வெளியான பாவக் கதைகள் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.
அதை தொடர்ந்து, நடிகர் சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்கள் இணைந்து கலக்கும் நவரசா வெப் தொடரை இயக்குநர் மணிரத்னம் தயாரித்து வருகிறார்.

நவரசா
அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார், கெளதம் மேனன், ஹலிதா ஷமீம், கார்த்திக் சுப்புராஜ், பொன்ராம் மற்றும் ரதீந்திரன் ஆர். பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் இயக்கியுள்ள 9 எபிசோடுகள் நெட்பிளிக்ஸின் நவரசா எனும் ஆந்தாலஜி வெப்சீரிசாக உருவாகி வருகிறது.

ஆந்தாலஜியில் சூர்யா
காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் கமலும் காதம்பரியும் எனும் அரை மணி நேர படத்தை சூர்யாவை வைத்து கெளதம் மேனன் இயக்கி உள்ளார். கெளதம் மேனனுக்கு ஆந்தாலஜி பழகிப் போன விஷயம் என்றாலும், சூர்யாவுக்கு இது தான் முதல்முறை.

விஜய்சேதுபதியும் இருக்காரு
குட்டி ஸ்டோரியை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும் மீண்டும் ஒரு ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் ரேவதி உடன் இணைந்து மிரட்ட உள்ளார் விஜய் சேதுபதி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் போர்ஷனில் பாபி சிம்ஹா நடித்துள்ளார்.

மணிரத்னம் தயாரிப்பில்
பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கி வரும் இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வருகிறது நவரசா ஆந்தாலஜி. 9 கதைகளுடன் மிகப்பெரிய ஆந்தாலஜியாக நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாகவுள்ள நவரசாவை காண ரசிகர்கள் வெயிட்டிங். ஜெயேந்திர பஞ்சாபகேசன் என்பவருடன் இணைந்து மணிரத்னம் இந்த வெப் ஆந்தாலஜியை தயாரித்து வருகிறார்.

டாப் நடிகர்கள்
சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர் என பிரபல நடிகர்கள் மட்டுமின்றி, நித்யா மேனன், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா என திறமையான நடிகைகளும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம்
வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி நெட்பிளிக்ஸில் நவரசா ஆந்தாலஜி வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. ஜூன் மாதத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் நிலையில், அடுத்தடுத்து தமிழ்நாட்டில் தனது சப்ஸ்கிரைபர்களை அதிகரிக்க நெட்பிளிக்ஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











