Netflix: அடேங்கப்பா! இந்தியன் 2, விடாமுயற்சி, தங்கலான், SK 21... அதிரடி காட்டும் நெட்பிளிக்ஸ்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள மெகா பட்ஜெட் படங்களின் ஓடிடி உரிமையை தட்டித் தூக்கியுள்ளது. இதன்மூலம் கோலிவுட்டில் பல கோடிகளுக்கு பிஸினஸ் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நெட்பிளிக்ஸ் பண்டிகை
இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய் நடிப்பில் மிஸன் ஆகிய படங்கள் தமிழில் வெளியாகின. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்திலும் தரமான பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் அரங்கேறியுள்ளது. அடுத்தடுத்து அப்டேட்கள் கொடுத்து ஓடிடி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது நெட்பிளிக்ஸ்.

 Netflix: Netflix bagged OTT rights of Indian 2, VidaaMuyarchi, Thangalaan, SK 21, and Maharaja

அதன்படி, 2024ல் தமிழில் வெளியாகவிருக்கும் மெகா பட்ஜெட் படங்களின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அந்த வரிசையில் கமலின் இந்தியன் 2 முதலிடத்தில் உள்ளது. அதாவது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2, நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக விலை போயுள்ளதாக தெரிகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அபிஸியலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேபோல், அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுதான் இன்றைய தினம் நெட்பிளிக்ஸின் முதல் அபிஸியல் அப்டேட்டாக வெளியானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் மே மாதம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் தமிழ் உட்பட 4 மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகிறது. இந்தியன் 2, விடாமுயற்சி என இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படமும் இணைந்துள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் பீரியட் ஜானரில் மிரட்டலாக உருவாகியுள்ளது. ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள தங்கலான், ஏப்ரல் மாதம் ரிலீஸாகிறது. அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

அதேபோல், சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத எஸ்கே 21, ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் உருவாகி வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தையும் நெட்பிளிக்ஸ் தட்டித் தூக்கியுள்ளது. இதுவும் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும், விஜய் சேதுபதியின் 50வது படமான மஹாராஜா ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதவிர கீர்த்தி சுரேஷ் லீடிங் ரோலில் நடித்துள்ள கன்னிவெடி, ரிவால்வர் ரீட்டா, ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள சொர்க்கவாசல் படங்களின் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X