twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடவுள் கிருஷ்ணரை ஆபாசமாக சித்தரிப்பதா.. கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்.. டிரெண்டாகும் #Censor_Web_Series

    |

    சென்னை: கடவுள் கிருஷ்ணனை ஆபாசமாக சித்தரித்து நெட்பிளிக்ஸில் Krishna and his leela என்ற வெப்சீரிஸ் வெளியாகி இருப்பதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    Recommended Video

    Amazonல் வெளியாகும் தமிழ் படங்கள் | Master, Soorarai pottru

    இந்த லாக்டவுனில் பலரும் வீடுகளில் மொபைலே கதி என கிடக்கின்றனர். இந்நிலையில், இளைஞர்களை ஈர்க்க ஏகப்பட்ட வெப்சீரிஸ்கள் அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் வகையில் வைரலாகி வருகின்றன.

    இந்த வெப்சீரிஸ்கள் பெரும்பாலும், ஆபாசமாகவும், இந்து கடவுள்களை அவமதிப்பதாகவும், கெட்ட வார்த்தைகளாலும் நிரம்பி வழிகின்றன என்ற குற்றச்சாட்டுகள் பொது மக்களால் நாடு முழுவதும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

    தியேட்டர்கள் மூடல்

    தியேட்டர்கள் மூடல்

    கொரோனா பரவல் காரணமாக போடப்பட்ட லாக்டவுன் காரணமாக கிட்டத்தட்ட 4 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இந்த நேரத்தில் OTT தளங்களும், வெப்சீரிஸ்களும் இளைஞர்களின் ஃபேவரைட் பொழுது போக்காக மாறி உள்ளன. அதிலும், ஆபாச வெப் சீரிஸ்கள் பக்கம் தான் அதிக அளவில் இளைஞர்கள் மூழ்கி கிடக்கின்றனர்.

    செக்ஸ் கதை

    செக்ஸ் கதை

    எம்.எக்ஸ் பிளேயரில் கொட்டிக் கிடக்கும் மஸ்த்ராம் உள்ளிட்ட வெப்சீரிஸ்கள் இளைஞர்களின் ஃபேவரைட்டாக மாறி வருகின்றன. மொபைலிலேயே அனைத்தையும் பார்த்து விட முடியும் என்பதால், குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க முடியாத படி, ஹெட்செட் போட்டுக் கொண்டு இது போன்ற ஆபாச வெப்சீரிஸ்களில் இளந்தளிர்கள் நேரத்தை வீணடிக்கின்றனர்.

    இந்து கடவுள் அவமதிப்பு

    இந்து கடவுள் அவமதிப்பு

    அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில் வெளியான பாதாள் லோக் உள்ளிட்ட பல வெப்சீரிஸ்கள், இந்து கடவுள்களை அவமதிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. பாலிவுட் பிரபலங்கள் இந்து மதத்தின் புனிதத்தை கெடுத்து வருவதாகவும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் தொடர்ந்து வைத்து வருகின்றனர்.

    சென்சார் வேண்டும்

    சென்சார் வேண்டும்

    வெப்சீரிஸ்களுக்கு சென்சார் வேண்டும் என்ற டிரெண்டிங் அடிக்கடி டிரெண்டாகி வரும் நிலையில், தற்போது #Censor_Web_Series என்ற ஹாஷ்டேக்கை பாலிவுட் முதல் கோலிவுட் ரசிகர்கள் வரை டிரெண்ட் செய்து வருகின்றனர். ஏக்தா கபூரின் ஆல்ட் பாலாஜி தயாரிப்பு நிறுவனம், உல்லு தயாரிப்பு நிறுவனங்கள் தான் இதுபோன்ற வெப்சீரிஸ்களை தயாரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

    இந்த டிரெண்டிங்கிற்கு காரணம்

    இந்த டிரெண்டிங்கிற்கு காரணம்

    தற்போது #Censor_Web_Series என்ற ஹாஷ்டேக் கடுமையாக டிரெண்டாகி வருவதற்கு காரணம் என்னவென்றால், நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள கிருஷ்ணா அண்ட் இஸ் லீலா எனும் வெப்சீரிஸ் தான். இந்த வெப்சீரிஸில் கிருஷ்ணா எனும் நாயகன், பெண்களை ஏமாற்றி மோசடி செய்வதாக இந்த வெப்சீரிஸ் உருவாகி இருப்பதே தற்போது பூதாகர பிரச்சனையை கிளப்பி இருக்கிறது.

    கடவுள் கிருஷ்ணன்

    கடவுள் கிருஷ்ணன்

    இந்து மக்களின் கடவுளான கிருஷ்ணனை இது போல தவறாக சித்தரிப்பதா என பல வித கண்டன குரல்களும் எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. நெட்பிளிக்ஸின் அந்த வெப்சீரிஸை தடை செய்ய வேண்டும் என்றும், இனிமேல், இந்து கடவுள்கள் பற்றிய அவதூறான கருத்துக்களை கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் கோடான கோடி இந்து மக்களின் மனங்களை புண்படுத்தும் படி யாரும் வெளியிடக் கூடாது என்றும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    English summary
    Netflix new webseries Krishna and his Leela webseries got into trouble. It makes new controversy to show case Krishna character was a womanizer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X