நெட்பிளிக்ஸில் மேற்கு தொடர்ச்சி மலை.. மிஸ் பண்ணாம பாருங்கள்.. விவேக் ட்விட்!
சென்னை : நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை படத்தை மிஸ் பண்ணாம பாருங்கள் என்று பாடலாசிரியர் விவேக் கூறியுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை படத்தை அறிமுக இயக்குனர் லெனின் பாரதி இயக்கி இருந்தார் . இந்த படம் 2018ல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரித்து இருந்தார் .

இந்த திரைபடம் தற்போது நெட்பிளிக்ஸ்ல் வெளியிடப்பட்டுள்ளது என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தது. இதனை ரீ ட்விட் செய்த பாடலாசிரியர் விவேக், நான் பணியாற்றியதிலே சிறந்த படம் இந்த மேற்கு தொடர்ச்சி மலை என்று கூறியிருந்தார் மேலும் இந்த படத்தை காணத்தவறாதீர்கள் என்றும் கூறியுள்ளார் .
நடிகர் விஜய் சேதுபதி தனது நடிப்பை தாண்டி தயாரிப்பிலும் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகிறார். விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் படத்தின் மூலம் தனது தயாரிப்பை துவங்கினார். அதற்கு பிறகு ஜீங்கா, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சென்னை பழனி மார்ஸ் படங்களை தயாரித்து இருந்தார் .

பாடலாசிரியர் விவேக் தான் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான எழுத்தாளர் டாப் ஹீரோக்கள் படங்களுக்கு தொடர்ந்து இவர் தான் பாடல்கள் எழுதி வருகிறார். எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் தனது கலை பயணத்தை துவங்கிய பாடலாசிரியர் விவேக் ஆளப்போறான் தமிழன் பாடலின் மூலம் வெகுவாக பிரபலமடைந்தார். அதற்கு பிறகு உச்ச நடிகர்கள் அனைவருக்கும் இவர் தான் பாடலாசிரியர்.
பாடலாசிரியர் விவேக் நான் பணியாற்றிய சிறந்த படம் என்று மேற்கு தொடர்ச்சி மலை படத்தை குறிப்பிட்டு இந்த ட்விட்டை பதிவிட்டு இருக்கிறார் .இந்த படத்தின் கதை செல்லும் வழியில் பாடல்கள் வருமே தவிர தனியாக வராது .நேர்த்தியான கதையை கொண்டு இருக்கும் படம் தான் மேற்கு தொடர்ச்சி மலை படம் .
தற்போது இந்த படத்தை இயக்கிய இயக்குனர் லெனின் பாரதி அடுத்தாக பா.இரஞ்சித் தயாரிக்க இருக்கும் ஐந்து படங்களில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். பா.இரஞ்சித்தின் நீலம் புரடக்ஸன், கோல்டன் ரேசியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் இணைந்து இந்த ஐந்து படங்களை தயாரிக்க உள்ளனர் .


Click it and Unblock the Notifications











