கிறிஸ்துமசிற்கு நெட்ஃபிளிக்சில் எந்தெந்த படங்கள் ரிலீஸ்
சென்னை : ஓடிடி தளங்கள் பிரபலமாகி வருவதால் இதிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், தக்கவைத்துக் கொள்ளவும் கடும் போட்டி நிலவுகிறது. அமேசான், ஹாட் ஸ்டார் ஆகியன முன்னணியில் இருந்த நிலையில், அவற்றை ஓரங்கட்டி தற்போது நெட்ஃபிளிக்ஸ் முன்னணி இடத்திற்கு வந்துள்ளது.
இதற்கு காரணம் அதிகமானவர்களை கவர்ந்த Money Heist சீரிசின் கடைசி பகுதி வெளியிடப்பட்டது தான். இந்த ஆண்டின் கடைசி மாதத்தில் வெளியிடப்பட்ட இந்த சீரிசால் நெட்ஃபிளிக்சின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

கட்டணத்தை குறைத்த நெட்ஃபிளிக்ஸ்
இதனால் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்க தனது பிளான்களின் கட்டணத்தை 50 சதவீதம் வரை நெட்ஃபிளிக்ஸ் குறைத்துள்ளது. குறைந்தபட்ச பிளான் கட்டணம் ரூ.199 முதல் துவங்குகிறது. இந்த பிளானின் முந்தைய கட்டணம் ரூ.499 ஆக இருந்தது. மொபைல்களுக்கான பிளான்களின் கட்டணமும் 25.12 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

துல்கரின் க்ரூப்
தொடர்ந்து தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக அடுத்தடுத்து பல படங்களை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு வருகிறது. துல்கர் சல்மானின் பயோலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் படமான Kurup டிசம்பர் மாதத்தின் இரண்டாவது பகுதியில் வெளியிட உள்ளது. 1984 முதல் கேரள போலீசால் தேடப்பட்டு வரும் கிரிமினல் சுகுமாறா க்ருபாக துல்கர் நடித்துள்ள படம். இந்த படம் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

புதிய டிரெண்ட்
நெட்ஃபிளிக்சில் மிகவும் பிரபலமான சீரிசான The Witcher 2 மீண்டும் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. சாகசங்கள் நிறைந்த புகழ்பெற்ற வீடியோ கேமான இது Andrzej Sapkowski எழுதிய Polish குறும் படம் மற்றும் நாவலில் இருந்து உருவாக்கப்பட்டது. இது டிசம்பர் 18 ம் தேதி நெட்ஃபிளிக்சில் வெளியிடப்பட உள்ளது. இது போல் டிசம்பரில் ஃநெட்பிளிக்சில் ரிலீசாக உள்ள படங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

ரிலீஸ் படங்கள் லிஸ்ட்
டிசம்பர் 17 - The Witcher : S2 Decoupled
டிசம்பர் 18 - Don't Breathe 2
டிசம்பர் 19 - What Happened in Oslo
Demon Slayer : Kimetsu no Yaiba : Entertainment District Arc EP-3
டிசம்பர் 22 - Emily in Paris : S2
டிசம்பர் 24 - The silent sea
Don't look up
STAND BY ME Doraemon 2
Minnal Murali
டிசம்பர் 26 - Demon Slayer : Kimetsu no Yaiba : Entertainment District Arc EP-4
டிசம்பர் 27 - The Possession of Hannah Grace
டிசம்பர் 28 - Chhota Bheem : S14
டிசம்பர் 31 - Queer Eye : S6
Cobra Kai : S4
The Lost Daughter
நெட்ஃபிளிக்சின் Squid கேம்ஸ் உலகம் முழுவதும் புதிய டிரெண்டை உருவாக்கி உள்ளது. இதே போல் மாதவன் நடித்துள்ள Decoupled வெப்சீரிஸ் என தினம் ஒரு படத்தை வெளியிட்டு வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்த நெட்ஃபிளிக்ஸ் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











