அதே வைப்.. அதே அட்ராக்‌ஷன் ஃபீல் பண்ணியா.. சூர்யா, விஜய்சேதுபதியின் அசத்தலில் வெளியான நவரசா டிரைலர்!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குநர்கள் இயக்கத்தில் 9 கதைகள், 9 விதமான எமோஷன்களை கொட்டித் தீர்க்கும் நவரசா டிரைலர் வெளியாகி உள்ளது.

Recommended Video

Suriya Appreciates Kerala Boys For AYAN Song Recreation | KV Anand

சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், பார்வதி, ரேவதி, பாபி சிம்ஹா, அதர்வா, டெல்லி கணேஷ் என ஏகப்பட்ட நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த ஆந்தாலஜியில் நடித்துள்ளனர்.

நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் விரைவில் இந்த நவரசா ஆந்தாலஜி வெளியாக உள்ளது.

போராடும் சிறுவன்.. சாப்பிடவும் முடியாமல், மூச்சு விடவும் முடியாமல்.. ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்

மணிரத்னம் தயாரிப்பில்

மணிரத்னம் தயாரிப்பில்

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி உள்ளது நவரசா ஆந்தாலஜி ஒட்டுமொத்தமாக 9 கதைகள் மற்றும் ஏகப்பட்ட தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இயக்குநர் மணிரத்னமுடன் இணைந்து ஜெயேந்திர பஞ்சாபகேசன் இந்த ஆந்தாலஜியை தயாரித்துள்ளார்.

நடிகர்களின் எமோஷன்

நடிகர்களின் எமோஷன்

நெட்பிளிக்ஸில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்த ஆந்தாலஜி தமிழ் சினிமாவிலேயே மிகப்பெரிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்னதாக வெளியான நவரசா டீசரில் சூர்யா, விஜய்சேதுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்களின் எமோஷன்கள் மட்டுமே வித்தியாசமாக வெளியிடப்பட்டது.

டிரைலர் ரிலீஸ்

டிரைலர் ரிலீஸ்

இந்நிலையில் இன்று காலை 9:09க்கு நவரசாவின் டிரைலரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கிட்டார் கம்பி மேல் ஏறி நின்று குறும்படத்தின் காட்சிகளுடன் ஆரம்பமாகும் இந்த டிரைலர் சித்தார்த்தின் தெறி ரியாக்‌ஷன் உடன் முடிவடைகிறது.

கிட்டார் கம்பி மேல் ஏறி நின்று

கிட்டார் கம்பி மேல் ஏறி நின்று

காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் இணைந்துள்ளார் கெளதம் மேனன். கமலும் காதம்பரியும் என இந்த குறும்படத்திற்கு பெயர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த கதையில் வரும் பாடல் வரிகளையே தலைப்பாக மாற்றி கிட்டார் கம்பி மேல் ஏறி நின்று என வித்தியாசமான ரொமான்டிக் டைட்டிலை வைத்துள்ளார் கெளதம் மேனன். சூர்யா வாரணம் ஆயிரம் படத்தில் பார்த்தது போல படு ரொமான்டிக்காக இருக்கிறார்.

நவ இயக்குநர்கள்

நவ இயக்குநர்கள்

பிரியதர்ஷன், வசந்த், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார், கெளதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், சர்ஜுன் மற்றும் ரதீந்திரன் ஆர். பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் இயக்கியுள்ள 9 குறும்படங்கள் கொண்ட தொகுப்பாக நவரசா ஆந்தாலஜி நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாக உள்ளது.

நடிகர்கள் நட்சத்திர பட்டாளம்

நடிகர்கள் நட்சத்திர பட்டாளம்

சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், அதர்வா, டெல்லி கணேஷ், பார்வதி, அம்மு அபிராமி, அஞ்சலி, ரேவதி, ரித்விகா என நட்சத்திர பட்டாளமே இந்த 9 கதைகளில் நடித்துள்ளனர். கோலிவுட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரை விருந்தாக இந்த நவரசா வெளியாக உள்ளது.

விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ள நிலையில், இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் ரேவதி உடன் இணைந்து மிரட்ட உள்ளார் விஜய் சேதுபதி. திறமையான பல நடிகர்கள் இணைந்து மிரட்ட உள்ளதால் இந்த ஆந்தாலஜி மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

சித்தார்த்தை மறக்க முடியுமா

சித்தார்த்தை மறக்க முடியுமா

அரவிந்த் சாமி, அதிதி பாலன், அஞ்சலி, சித்தார்த் என ஏகப்பட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்களின் முகங்கள் டிரைலரின் ஒவ்வொரு பிரேமிலும் ரசிகர்களை மலைக்க வைக்கிறது. அதிலும் கடைசியாக நாக்கை கடித்துக் கொண்டு சித்தார்த் பேசும் "மறந்துட்டீங்களோ" என்கிற வசனம் வேற லெவல்.

ஆகஸ்ட் 6

அடுத்த மாதம் ஆகஸ்ட் 6ம் தேதி நெட்பிளிக்ஸில் நவரசா ஆந்தாலஜி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என மொத்தம் 4 மொழிகளில் வெளியாக உள்ள இந்த ஆந்தாலஜி உலகம் முழுவதும் ஏகப்பட்ட நாடுகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது. டிரைலரை பார்ப்பது போல அதே வைப்.. அதே அட்ராக்‌ஷன் முழு ஆந்தாலஜியை பார்த்தாலும் இருக்குமா என்பதை ஆகஸ்ட் 6ம் தேதி பார்த்து விடுவோம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X