நயன்தாராவுக்காக நெட்பிளிக்ஸிடம் மல்லுக்கட்டிய விக்னேஷ் சிவன்.. கலகல ட்விட்!

சென்னை : நயன்தாராவின் பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்து இணையத்தளம் முழுக்க வாழ்த்துக்களால் நிரம்பி வழிந்தது.

Recommended Video

Nayanthara Family Surprise Birthday Party | Vignesh Shivan, Celebrity Wishes | Filmibeat Tamil

தென்னிந்தியாவில் உச்சநடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெற்றிக்கண் படத்தின் டீசரை அப்படக்குழு பிறந்தநாள் பரிசாக நேற்று வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸும் தனது பங்கிற்கு நயன்தாராவுக்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்க, அதற்கு விக்னேஷ் சிவன் கலாய்த்து பதிலளித்து உள்ளார்.

தெறிக்கவிட்ட வாழ்த்துக்கள்

தெறிக்கவிட்ட வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வரும் நடிகை நயன்தாரா நேற்று தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியதையொட்டி ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இணையதளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை மிதக்க விட்டனர்.

க்யூட் புகைப்படங்கள்

க்யூட் புகைப்படங்கள்

இந்நிலையில் நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன், காதலியின் பிறந்த நாளை செம்ம ரொமான்டிக்காக கொண்டாடிய க்யூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டது இணையதளத்தை திக்குமுக்காட வைத்திருந்தது.

நெட்பிளிக்ஸும் வாழ்த்து

நெட்பிளிக்ஸும் வாழ்த்து

ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வர பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸும் தனது பங்கிற்கு வித்தியாசமான முறையில் நயன்தாராவிற்கு வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அதில் "இவரது பெயர் வேண்டுமானால் 9 என இருக்கலாம் ஆனால் எங்களைப் பொறுத்த வரையிலும் நீங்கள் பத்துக்கு பத்து(10/10)" என வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த நெட்பிளிக்ஸின் பதிவு வைரல் ஆனது.

ஏதோ எங்களால முடிஞ்சது

ஏதோ எங்களால முடிஞ்சது

இதனை பார்த்த விக்னேஷ் சிவன் விக்ரமின் ஐ படத்தில் வரும் சண்டைக் காட்சி மீமைப் போட்டு, " யாருடா இவங்க நமக்கு டஃப் கொடுப்பான் போல" என்றவாறு கலகலப்பான மீமை போட்டு நெட்பிளிக்ஸ் இந்தியாவின் பதிவிற்கு பதில் அளித்ததற்கு " ஏதோ எங்களால முடிஞ்சது" என நெட்பிளிக்ஸும் அதற்கு நகைச்சுவையாக மறு பதில் செய்திருக்க இந்த கலகலப்பான கலந்துரையாடல் இப்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X