twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா வைரஸ் தாக்கம்.. நெட்பிளிக்ஸுக்கு வந்த இப்படியொரு சோதனை?

    |

    சென்னை: ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸையும் கொரோனா வைரஸ் சும்மா விட்டு வைக்கவில்லை.

    கொரோனா வைரஸ் அதிகளவில் பரவாமல் தடுக்க, பொதுமக்கள் தங்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது.

    Netflix urged to slow down streaming to stop the internet from breaking

    பல பெரிய நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கவும் அனுமதித்திருக்கிறது.

    இதனால், இணைய பயன்பாடு இதற்கு முன் இருந்ததை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், இணையதள சேவை முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதனை கட்டுப் படுத்தும் முனைப்போடு, நெட்பிளிக்ஸின் ஹெச்.டி. தர சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு, சாதாரண மோடில் நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தை இயக்க ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டுள்ளது.

    பொதுமக்கள் திரையரங்கு மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளதால், நெட்பிளிக்ஸ் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தின் வியாபாரம் அமோகமாக அதிகரித்துள்ளது.

    ஆனால், அத்தியாவசியமான வேலைகளுக்கு இணைய சேவை முக்கியம் என்பதால், அதற்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக நெட்பிளிக்ஸின் ஹெச்.டி தர சேவையை கட்டுப்படுத்துமாறு, ஐரோப்பிய யூனியனின் கமிஷனர் தியரி பிரெட்டன், நெட்பிளிக்ஸ் சி.இ.ஓ ரீட் ஹாஷ்டிங்கிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    மேலும், பொதுமக்களும், பெரு நிறுவனங்களும் ஹெச்.டி தர சேவையை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் ஸ்டாண்டர்ட் மோடுக்கு மாறும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    எதிர்பாராத விதமாக உலக நாடுகளையே கொரோனா வைரஸ் தாக்கம் அச்சுறுத்தி வரும் சூழலில், இணையத்தின் சேவை மிகவும் முக்கியமானது என்றும், அதனை அனைவருக்கும் பயன்படும் விதத்தில் அளவுடன் உபயோகிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    அதேபோல, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க்கும், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பேஸ்புக்கில் குவியும் மக்கள் கூட்டம் இரட்டிப்பாகி உள்ளதாகவும், சர்வர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், பேஸ்புக்கின் டேட்டா அளவுகளை தற்காலிகமாக முடிந்தவரை குறைத்துள்ளோம் என்றும் தேவைப்பட்டால், மேலும் நடவடிக்கை எடுக்க தயார் என்றும் கூறியுள்ளார்.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல நிறுவனங்களின் வேலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகளை தேவை ஏற்பட்டால் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் இடையேயும் வந்தால் நன்றாக இருக்கும்.

    English summary
    The European Union is urging Netflix and other streaming platforms to stop showing video in high definition to prevent the internet from breaking under the strain of unprecedented usage due to the coronavirus pandemic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X