ஆங்கிலத்தில் ஸ்ரீவள்ளி பாடல்... நெஞ்சை அள்ளும் நெதர்லாந்து பாடகியின் வித்தியாச முயற்சி

சென்னை : அல்லு அர்ஜுன் -ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படம் தொடர்ந்து ஹிட் வரிசையில் உள்ளது.

இந்தப் படத்தில் ஸ்ரீவள்ளி பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. பிரபலங்கள் பலர் இந்தப் பாடலை டப்ஸ்மாஷ் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் பாடலை பிரபல நெதர்லாந்து பாடகி எம்மா ஹீஸ்டர்ஸ் ஆங்கிலத்தில் பாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

புஷ்பா படம்

புஷ்பா படம்

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த டிசம்பரில் வெளியான படம் புஷ்பா. இந்தப் படம் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தின் வசூல் மிரட்டலாக உள்ளது.

வசூல் வேட்டை

வசூல் வேட்டை

தெலுங்கில் மட்டுமின்றி, தமிழ், இந்தியிலும் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்தியில் 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ளது. படத்தை இயக்கியுள்ளார் சுகுமார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் எடுக்கப்பட உள்ள நிலையில் அடுத்த மாதத்தில் அதன் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கடத்தல் படம்

மரக்கடத்தல் படம்

மரக் கடத்தலை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் மரங்களை கடத்தும் லாரி டிரைவராகவும் தொடர்ந்து அதன் கடத்தல் தலைவராகவும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அல்லு அர்ஜுன். அவரது முந்தைய படமான அலா வைகுந்தபுரமுலு படத்தில் ஸ்டைலாக வந்த அவர் அப்படியே மாறுபட்ட கோணத்தில் கெட்டப் சேஞ்ச் செய்துள்ளார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசை

தேவிஸ்ரீ பிரசாத் இசை

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக சமந்தாவின் பாடல், ராஷ்மிகாவின் லவ் சாங்ஸ் சிறப்பாக அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி ஸ்ரீவள்ளி பாடலும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் பாடலை பாடியுள்ளார் சித் ஸ்ரீராம்.

ஆங்கிலத்தில் ஸ்ரீவள்ளி பாடல்

ஆங்கிலத்தில் ஸ்ரீவள்ளி பாடல்

இந்நிலையில் நெதர்லாந்தை சேர்ந்த எம்மா ஹீஸ்டர்ஸ் ஸ்ரீவள்ளி பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து பாடி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் முன்னதாக எஞ்சாமி பாடலையும் பாடி பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அவரது குரலில் இந்தப் பாடல்களை கேட்பது மிகவும் இனிமையாக உள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத் பெருமை

தேவிஸ்ரீ பிரசாத் பெருமை

இந்நிலையில் அசத்தலான இந்தப் பாடலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மிகவும் விரும்புவதாக படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும் தான் ரெக்கார்டிங்கின்போதே குஷிக்காக இந்தப் பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து உருவாக்கலாம் என்று கூறியதையும் சித் ஸ்ரீராமிடம் கூறும்படியாக கேப்ஷனில் தெரிவித்துள்ளார். நாமும் இந்த முயற்சியை செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X