2.5 மில்லியனை நெருங்கிய 'நேத்து'... வித்தியாசமான உருவாக்கத்தில் ரசிகர்களை கவர்ந்த பாடல்
சென்னை : நேற்றைய தினம் ஜெகமே தந்திரம் படத்தின் நேத்து பாடல் வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்டு ஒரே நாளில் இந்த பாடல் தற்போது 2.5 மில்லியன் பார்வைகளை நெருங்கியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு மியூசிக் அமைத்துள்ளார்.

3வது பாடல் வெளியீடு
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெகமே தந்திரம். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் 3வது சிங்கிள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

காதலை பரப்புவோம்
முன்னதாக இரு தினங்களுக்கு முன்பு படத்தின் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இந்த கடினமான காலத்தில் கொஞ்சம் காதலை பரப்புவோம் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்றாற் போல அதிகமான காதலை இந்த பாடல் வெளிப்படுத்துகிறது.

2.5 மில்லியன் பார்வைகள்
வித்தியாசமான பின்புலத்தில் வித்தியாசமான கெட்டப்புடன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இந்த பாடலில் நடித்துள்ளனர். இடையிடையே தனுஷ் முத்தம் கொடுக்க தவிப்பதும் அதற்கு இடம்கொடுக்காத சூழலும் என பாடல் நகர்கிறது. இந்நிலையில் இந்த பாடல் வெளியிடப்பட்ட ஒரே நாளில் 2.5 மில்லியனை நெருங்கியுள்ளது.

தேவையான காதல்
இதை பாடலை வெளியிட்டுள்ள சோனி மியூசிக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கொரோனாவால் மக்களின் மனங்கள் வறண்டு போயுள்ள இந்த சூழலில் இந்த காதல் அனைவருக்குமே தற்போது தேவையாகத்தான் உள்ளது. நடிகர் தனுஷ் இந்த பாடலை எழுதி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











