தனுஷ் பாடினதுல 'நேத்து' பாடல் என்னோட பேவரிட்.... சந்தோஷ் நாராயணன் பாராட்டு

சென்னை : தனுஷ் நடிப்பில் ஜெகமே தந்திரம் படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Recommended Video

Jagame thanthiram teaser | Dhanush, Karthick Subburaj, Aishwarya Lekshmi

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.

நாளைய தினம் படத்தின் நேத்து பாடல் வெளியிடப்பட உள்ளதாக தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ஜெகமே தந்திரம். கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.

படத்தின் பாடல் நாளை வெளியீடு

படத்தின் பாடல் நாளை வெளியீடு

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. மேலும் படத்தின் 3வது பாடல் நாளைய தினம் வெளியிடப்பட உள்ளதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார். இந்த கடினமான நேரத்தில் காதலை பரப்புவோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சந்தோஷ் நாராயணன் பாராட்டு

சந்தோஷ் நாராயணன் பாராட்டு

நடிகர் தனுஷ் எழுதி பாடியுள்ள இந்த பாடல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் தன்னுடைய பிரியத்திற்குரிய தனுஷ் பாடியுள்ள இந்த பாடல் தங்களது கூட்டணியில் தனது மிகுந்த விருப்பத்திற்குரிய பாடல் என்று படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் உறுதி

சந்தோஷ் நாராயணன் உறுதி

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நேரத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார். அனைவரின் சிறந்த உடல்நலத்திற்காக தான் பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X