அப்படியே அந்த படத்தை பத்தியும் கருத்து சொல்லிடுங்க.. பா ரஞ்சித்தை வம்பிழுக்கும் திரௌபதியன்ஸ்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித்தின் டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் திரௌபதி படம் குறித்தும் கருத்து சொல்லுங்கள் என கூறி வருகின்றனர்.

Recommended Video

Kanni Maadam Saaya Devi Opens Up - Director Metti oli Boss Venkat

வண்ணாரப் பேட்டை இயக்குநர் மோகன் இயக்கியிருக்கும் படம் திரௌபதி. இந்த படத்தை 50 லட்சம் ரூபாய் செலவில் கிரவுட் ஃபன்டிங் முறையில் தயாரித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக் கிழமை இந்தப் படம் ரிலீஸானது. தமிழகம் முழுக்க 330 தியேட்டர்களில் ரிலீஸான இப்படம் முதல் 2 நாட்களில் 5 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

நாடகக் காதல்

நாடகக் காதல்

இந்தப் படம் நாடகக் காதல் சம்பவத்தை தோலுரித்து காட்டுவதாக உள்ளது. இப்படத்திற்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் குடும்பம் குடும்பமாக சென்று படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். குறிப்பாக படத்திற்கு பெண்கள் கூட்டம் கூட்டம் அதிகம் உள்ளதாக தெரிகிறது.

பிரபலங்கள்

பிரபலங்கள்

படம் ரிலீஸ் ஆகி மூன்று நாட்கள் ஆன போதும் படம் திரையிடப்படும் தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்லாகி வருகிறது. படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பாஜகவின் எச் ராஜா, பாமகவின் ராமதாஸ், நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி உள்ளிட்ட பலரும் படத்தை பார்த்த போட்டோக்கள் வெளியானது.

கன்னிமாடத்துக்கு பாராட்டு

இந்நிலையில் இயக்குநர் பா ரஞ்சித் கன்னிமாடம் படத்தை பாராட்டி டிவிட்டியிருக்கிறார். கன்னிமாடம் படத்தை நடிகர் போஸ் வெங்கட் இயக்கி இயக்குநராக அறிமுகமானார். இதில் கார்த்திக் ஸ்ரீராம் மற்றும் சாயா தேவி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தை பாராட்டியிருக்கிறார், இயக்குநர் பா ரஞ்சித்.

மனம் நிறைந்த வாழ்த்து

மனம் நிறைந்த வாழ்த்து

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, #கன்னிமாடம் திரைப்படம் இயல்பான திரையோட்டத்தில், சமரசமில்லாமல் #ஆணவக்கொலைகள் குறித்து, தான் சொல்ல நினைத்த கதையை மிக இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனர் #போஸ்வெங்கட் அவர்களுக்கும் & அத்திரைப்பட குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் என கூறியிருக்கிறார்.

நல்லா இருக்கும்

இதனை பார்த்த நெட்டிசன்கள், அப்படியே திரௌபதி படத்தை பார்த்து கருத்தை சொல்லுங்கள் என கருத்து தெரிவித்துள்ளனர். பிரதர் அப்படியே #திரெளபதி படமும் பார்க்க வாருங்கள்.. என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன். இந்த ரசிகர் ஜீ அந்த திரௌபதி பத்தி சொன்னிங்கன்னா நல்லா இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

பார்த்துட்டு வரலாமே

ரஞ்சித்தின் இந்த டிவிட்டை பார்த்த இந்த நெட்டிசன், திரெளபதி படம் பாக்க மோகன் கூப்பிடுறாரு போயி பாத்துட்டு வரலாமே.. என கூறியிருக்கிறார். மற்றொரு நெட்டிசனான இவர் சாதி சமத்துவம் படைக்க நினைப்பவர் எல்லா பக்கமும் போகனும். அப்பத்தான் படைக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.
இந்த நெட்டிசன் அப்படியே அந்த #திரெளபதி படத்தை பார்த்திட்டு...எப்படி இருக்குன்னு சொன்னீங்கனா இன்னொரு தடவை பார்த்திடுவேன் என்று கூறியிருக்கிறார்.

கலாய் வசனங்கள்

திரௌபதி படம் இயக்குநர் ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்களுக்கு எதிரானதாக உள்ளது. திரௌபதி படத்தில் இயக்குநர் ரஞ்சித்தையும் கலாய்த்து வசனங்கள் இடம் பெற்றுள்ளன. ரஞ்சித் ஆதரவாக பேசும் சமூகத்தை எதிர்த்து எடுக்கப்பட்டுள்ளது திரௌபதி படம். இந்நிலையில் அந்த படத்தை பார்த்து கருத்து சொல்லுங்கள் என அவரை வம்பிழுத்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X