சத்குருவிற்காக சமந்தா செய்த காரியம்.. இது தேவையா? விளாசும் நெட்டிசன்கள்!
சென்னை : சத்குரு ஜக்கி வாசுதேவிற்காக நடிகை சமந்தா செய்த காரியத்தால் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இரு மொழிகளிலும் உச்ச நடிகர்களுடன் நடித்து வரும் சமந்தா வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
அதோடு ஹாலிவுட் வெப் சீரிஸ், அடுத்தடுத்து படங்கள் என பிஸியாக உள்ளார்.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ என இருமுறை நடைபெற்றது. இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இது ரசிகர்களை மிகவும் கவலையடையச் செய்தது.

மன உளைச்சலில்
சமந்தா பேமிலி மேன் வெப் சீரிஸ்களில் நடித்த சர்ச்சைக்குரிய காட்சிகளே இருவரின் பிரிவுக்கும் காரணம் என கூறப்படுகிறது. மேலும், சிகை அலங்கார நிபுணர் ஒருவருடன் சமந்தா நெருங்கமாக இருந்ததால் பிரிந்ததாகவும் மேலும், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதால் பிரிந்ததாகவும் பலவிதமான வதந்திகள் இணையத்தில் பரவிய தகவலால் மன உளைச்சலில் இருந்த சமந்தா, அதிலிருந்து மீண்டும் தனது வேலையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

வாழ்க்கை ஏன் மோசமா இருக்கு
இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவுடன் நடிகை சமந்தா ஆன்மீக கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது ஒரு சிலருக்கு ஏன் வாழ்க்கை இவ்வளவு மோசமாக இருக்கிறது என்றும், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து கேட்டார். இதற்கு பதிலளித்த சத்குரு, இந்த உலகம் உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பது தவறு என்றார்.

மனம் லேசாக உள்ளது.
மேலும், இரண்டு மணிநேரம் நடந்த இந்த உரையாடல் எனக்கு ஒரு மணி நேரம் போல தெரிகிறது. சத்துருவுடனான உரையாடலுக்கு முன் பதற்றத்தில், மன பயத்துடனும் இருந்தேன். ஆனால் தற்போது மனம் லேசாகி உள்ளதை என்னால் உணர முடிகிறது என்றார்.
Recommended Video

சத்குருவுடன் பைக்கில் செல்லனும்
மேலும், இந்த வீடியோவிற்கு தனக்கு 2.5 மில்லியன் லைக்ஸ் வேண்டும் அப்போது தான் நான் சத்குருவுடன் பைக்கில் செல்ல முடியும் என்று சமந்தா கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் இதுஎல்லாம் ஒரு பேச்சா என்றும், நடிகை சாய் பல்லவி ஆட்கள் சமூக பிரச்சனைகள் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி வருகின்றார்கள். ஆனால், நீங்கள் இப்படி செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று இப்படி விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











