வெள்ளையன் கருப்பனுக்காக இறுதிவரை போராடும் குன்னிமுத்து!
சென்னை : வெள்ளையன் மற்றும் கருப்பன் என்ற இரண்டு மாடுகளை மையப்படுத்திய அருமையான கிராமத்து கதை களத்தில் உருவாகியுள்ளது இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்.
ரம்யா பாண்டியன்,மிதுன் மாணிக்கம், வாணிபோஜன் என பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இப்பொழுது ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.
காணாமல் போன இரண்டு மாடுகள் இறுதிவரை போராடி கண்டுபிடிக்கும் குன்னிமுத்துவின் போராட்டம் பார்க்கும் அனைவரையும் கண் கலங்க வைக்கிறது.

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்
தமிழ் சினிமாவில் அவ்வப்போது அத்தி பூத்தார் போல் வித்தியாசமான கதைகள் வெளியாவது உண்டு. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப் பட்டுள்ளது . கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு மாடுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார்.

2டி என்டர்டெய்ன்மென்ட்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்க மிதுன் மாணிக்கம் ஹீரோவாக நடித்துள்ளார். வாணிபூஜன் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரித்து உள்ளனர்.

குன்னிமுத்துவின் போராட்டம்
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் இப்பொழுது ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இதில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்க கதாநாயகனாக நடித்துள்ள குன்னிமுத்துவின் மாடுகளை மீட்கப் போராடும் காட்சிகள் பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.

கண் கலங்க வைக்கிறது
வீராயி மற்றும் குன்னிமுத்து கருப்பன் வெள்ளையன் என்ற இரண்டு மாடுகளை தங்களது சொந்தப் பிள்ளைகளாக நினைத்து வளர்த்துக் கொண்டு இருக்க ஒரு கட்டத்தில் அரசியல் லாபத்திற்காக மாடுகள் கடத்தப்பட்டு விற்கப்படுகிறது. மாடுகள் காணாமல் போன சோகத்தில் இருக்கும் வீராயி மற்றும் குன்னிமுத்து இறுதிவரை போராடி தங்களது பிள்ளைகளை கண்டுபிடிக்கின்றனர். கருப்பன் மற்றும் வெள்ளையனை கண்டுபிடிக்க குன்னிமுத்து போராடும் காட்சிகள் பார்க்கும் அனைவரையும் கண் கலங்க வைக்கிறது.


Click it and Unblock the Notifications











