Just In
- 28 min ago
‘’கர்ணன்’’ ரொம்ப நல்லா இருக்கு..வீட்டிற்கே சென்று பாராட்டிய விக்ரம்
- 55 min ago
அடக்கடவுளே.. ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்புக்கு இப்படியொரு சிக்கலா? என்ன செய்ய போகிறார் விஜய்?
- 2 hrs ago
போகட்டும் ரைட்..... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா ஷூட்டிங் ஆரம்பம் !
- 2 hrs ago
கர்ணன்ல கலக்கிட்டீங்க.. பையன் படத்தை தரமா பண்ணிடுங்க.. மாரி செல்வராஜை வாழ்த்திய சியான் விக்ரம்!
Don't Miss!
- Automobiles
செம பவர்ஃபுல் எஞ்சின் தேர்வுகள், சூப்பரான வசதிகள்... பிரிமீயம் எஸ்யூவிகளை மிரட்டும் புதிய ஸ்கோடா கோடியாக்!
- Finance
ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் ரூ.300 கோடி வசூல்.. வழிகாட்டுதலை மீறிய SBI!
- Lifestyle
12 ராசிகளுக்குமான பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்!
- News
ஒரே மர்மம்.. துரைமுருகனின் பண்ணை வீடு.. கீழே கிடந்த "லிஸ்ப்டிக்".. கடுப்பான மர்மநபர்கள் செய்த பகீர்
- Sports
டெல்லி கேபிடல்சுக்கு அடுத்த இடி... நார்ட்ஜேவுக்கு கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்தப்பட்ட பௌலர்
- Education
மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! தேர்வு கிடையாது! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்கள் பக்கத்தில் இருக்க ஆரிக்கு தகுதி இல்லையா? விளாசிய நெட்டிசன்ஸ்.. விளக்கம் கொடுத்த அர்ச்சனா!
சென்னை: ஆரியுடன் போட்டோ ஷேர் செய்யாததற்காக விளாசிய நெட்டிசன்களுக்கு அர்ச்சனா பதில் அளித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த மாதம் 17 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
அதுக்குள்ள இவ்ளோ வருஷமாயிடுச்சா? சினிமாவில் 7 வருஷம்.. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பிரபல நடிகை!
இதில் அர்ச்சனா, ரியோ, நிஷா, ஜித்தன் ரமேஷ், சோம சேகர், கேபி ஆகியோர் ஒரு கேங்காக இருந்தனர். அந்த கேங் அன்பு கேங் என்றழைக்கப்பட்டது.

அர்ச்சனாவின் அன்பு கேங்
அந்த கேங்கை சேர்ந்தவர்களில் நிஷாவை தவிர மற்ற அனைவருமே ஆரியிடம் பாரா முகத்துடன் நடந்து கொண்டனர். குறிப்பாக அர்ச்சனா அவர்களை ஏற்றி விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

பிக்பாஸ் கொண்டாட்டம்
ஆரி ஏன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவில்லை என அவர் சேவ்வாகும் போதெல்லாம் சக ஹவுஸ்மேட்ஸிடம் விவாதித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.

அர்ச்சனா போட்டோஸ்
இதில் மொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் பங்கேற்றனர். இதில் அர்ச்சனா ஆரியை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களுடனும் இணைந்து போட்டோக்களை எடுத்து கொண்டார். அந்த போட்டோக்களை தனது சோஷியல் மீடியாவிலும் பகிர்ந்தார்.

ரியோ திருமண நாள்
இதனை கவனித்த நெட்டிசன்கள் ஆரியுடன் ஏன் போட்டோ எடுக்கவில்லை என்று கேட்டு வந்தனர். இந்நிலையில் ரியோவின் திருமண நாளை முன்னிட்டு ரியோ தனது மனைவி ஸ்ருதியுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார் அர்ச்சனா.

ஆரிக்கு தகுதி இல்லையா?
இதனை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவின் கேவலமான புத்தி இதுதான் என விளாசினர். மேலும் ஆரியுடன் நீங்கள் ஏன் போட்டோ எடுக்கவில்லை? அவருகுகு உங்கள் அருகில் நிற்க தகுதி இல்லையா என்று கேட்டனர்.

குறைந்த போட்டோக்கள்தான்
அதற்கு பதில் கூறியுள்ள அர்ச்சனா பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் போட்டோ எடுக்க தங்களுக்கு நேரம் இல்லை என்றும் குறைந்தளவு போட்டோக்களே எடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தாங்கள் எடுத்த போட்டோக்கள் எண்டோமால் நிறுவனத்திடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

என்ன செய்யலாம்?
மேலும் ஆரியுடன் போட்டோ எடுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் எடுத்துக்கொள்வோம். ஆரியிடமும் இதேபோல் போட்டோ எடுத்துக்கொள்ளுமாறு எழுதுங்கள். அப்போதுதான் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பது அவருக்கும் தெரியவரும். என்னுடன் இருப்பது போன்ற போட்டோ அவரிடமும் இல்லை என்ன செய்யலாம் என்று கேட்டுள்ளார்.