என்னடா டோனல் டக் ஹியூமன் வெர்ஷன் மாதிரி இருக்கு.. ஜூலி வீடியோவை பார்த்து பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் ஜூலி ஷேர் செய்திருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கம் செய்துள்ளனர்.
பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜூலி தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் கமிட்டாகியுள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஜூலி அவ்வப்போது தனது ஹாட் அன்ட் க்யூட் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

முத்தம் கொடுக்க போன ஜூலி
சமீபத்தில் என்னுடைய உயிர் என இளைஞர் ஒருவருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டார். அதில் அந்த இளைஞரின் அருகில் அமர்ந்து முத்தம் கொடுக்க போன ஜூலி கடைசியில் தும்மி விட்டு திரும்பினார்.

ஹோட்டலில் ஜூலி
அதனை பார்த்த ரசிகர்கள் அவர்தான் உங்களின் காதலரா என கேட்டு வந்தனர். இந்நிலையில் ஜூலி மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஹோட்டல் ஒன்றில் தனது ஆண் நண்பருடன் சாப்பிடுகிறார் ஜூலி.

கீச் குரலில் இமிட்டேட்
அப்போது கண்களை உருட்டி கோபமாக பார்க்கிறார் ஜூலி. அப்போது பேசும் அவரது நண்பர் சாப்பாடு சாப்பிட தெரியாது, ச்சீ.. என்கிறார். அதனை அப்படியே கீச் குரலில் இமிட்டேட் செய்யும் ஜூலி, என்ன வாங்கிக் கொடுத்திருக்க பன்னிக்குட்டி குடிக்கிற மாதிரி என்றும் கோபமாக பேசுகிறார்.
கேலி செய்தாலும் கவலையில்லை
அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஜூலி, அதற்கு பேசும் போது எனக்கு வாய் ஒரு பக்கமாக போகும் என்பது எனக்கு தெரியும்.. அதைப்பற்றி நீங்கள் கேலி செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று பதிவிட்டுள்ளார்.

டோனல் டக் ஹியூமன் வெர்ஷன்
இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர், இது என்னடா டோனல் டக் ஹியூமன் வெர்ஷன் மாதிரி இருக்கு என்று கிண்டலடித்துள்ளனர். இன்னும் சிலர் என்ன ஜூலி இப்படி பயம் காட்றீங்க என்றும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











