twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கி.ரா மறைவுக்கு நெகிழ்ச்சியான பதிவு.. அவசரத்துல பிரியா பவானி சங்கர் பண்ண அந்த மிஸ்டேக்!

    |

    சென்னை: கரிசல் இலக்கியத்தின் தந்தை எழுத்தாளர் கி. ராஜநாராயணன் வயது மூப்புக் காரணமாக காலமானார்.

    அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் இரங்கல் தெரிவித்து வருகிறது.

    தனுஷ் & மாரி செல்வராஜை புகழ்ந்த பிரபல ஹிந்தி இயக்குனர்! தனுஷ் & மாரி செல்வராஜை புகழ்ந்த பிரபல ஹிந்தி இயக்குனர்!

    நடிகை பிரியா பவானி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை என பதிவிட்ட ட்வீட்டில் ஒரு பெரிய எழுத்துப் பிழை ஏற்பட அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

    செம ஆக்டிவ்

    செம ஆக்டிவ்

    லாக்டவுன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் எல்லாம் நிறுத்தப் பட்ட நிலையில், பல முன்னணி பிரபலங்களும் சமூக வலைதளத்தில் செம ஆக்டிவாக உள்ளனர். செய்தி வாசிப்பாளராக இருந்து ஹீரோயினான நடிகை பிரியா பவானி சங்கரும் சமீப காலமாக ட்விட்டரில் தொடர்ந்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

    கி.ரா மறைவுக்கு இரங்கல்

    கி.ரா மறைவுக்கு இரங்கல்

    கரிசல் இலக்கியத்தின் தந்தையாக கருதப்படும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் வயது மூப்புக் காரணமாக காலமானது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கும் எழுத்து மற்றும் வாசிப்பு உலகத்துக்கும் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. பல பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் "எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை என ட்வீட் போட்டு தனக்கு கி.ரா எப்படி அறிமுகமானார் என்பதையும் விளக்கி உள்ளார்.

    கோபல்ல கிராமம்

    கோபல்ல கிராமம்

    " கி. ராஜநாராயணன்.. தமிழ் பேசினா ஃபைன் கட்டணும்னு கிளாஸ் லீடர பெயர் எழுத சொல்ற ஸ்கூல்ல 14 வருஷம் படிச்சி வளர்ந்த என்னை, அப்படி ஒரு வாழ்க்கை முறையில் ஒரு தனியார் நூலகர் பரிந்துரையில் 'கோபல்ல கிராமம்' மூலம் அறிமுகமானவர் தான் கி.ரா என கி.ராவின் புத்தகத்தை பற்றி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

    வயது வந்தவர்களுக்கு மட்டும்

    வயது வந்தவர்களுக்கு மட்டும்

    அப்புறம் 14,15 வயதில், 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' அப்படிங்கற பேர் நம்மல இம்ப்ரெஸ் பண்ண, ஒரு குறுகுறுப்புடன் அதை லைபரியன் கிட்ட வச்ச என்னை நினைச்சா எனக்கே சில சமயம் இப்படி இருக்கும் என வெட்க எமோஜியை பதிவிட்டுள்ளார். மேலும், இவரது சிறுகதைகள் நான் வாழாத உலகத்தை மனசுல பதியவச்சுது. எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை. இப்பவும் என்னை புன்னகைக்க வைக்கிறார் என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    'ஜ'க்கு பதில் ஐ

    'ஜ'க்கு பதில் ஐ

    இப்படி கி.ராவை பத்தி உருக்கமாக பிரியா பவானி சங்கர் அவரது மறைவால் உணர்ச்சிவசப்பட்டு எழுதியதில் ராஜநாராயணன் பெயரில் வரும் ஜக்கு பதில் ஐ என டைப் செய்து விட்டார். இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் 'ஜ'க்கும் 'ஐ'க்கும் நிறைய பேருக்கு வித்தியாசம் தெரிய மாட்டுதே என சுட்டிக் காட்ட உடனடியாக மன்னிப்பு கேட்டு ட்வீட் போட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

    பார்வை கோளாறு

    பார்வை கோளாறு

    " Thanks for pointing out.. மன்னிக்கவும் **எழுத்துப்பிழை கி.ராஜநாராயணன் I don't use eng to tamil phonetic keypad. தமிழ் keypad தான். பார்வை கோளாறு நினைக்கிறேன். Check பண்ணிடறேன்" என உடனடியாக மன்னிப்பு கேட்ட அந்த மனசுக்காக பிரியா பவானி சங்கர் அவரை பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Netizen pointed out actress Priya Bhavani Shankar typo error in Ki. Rajanarayanan condolence message in her twitter page.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X