ரோஜாவின் மகளுக்கு வந்த ப்ரபோஸ்… நெத்தியடி பதிலளித்த வாரிசு !
தெலுங்கானா: நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுவிடம் ஒரு நெட்டிசன் ஸ்பானிஷ் மொழியில் "ஐ லவ் யூ" என்றி கூறி ப்ரபோஸ் செய்துள்ளார்.
இதற்கு அன்ஷுவும் நன்றி என கூறி, அந்த நெட்டிசனை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
இணையத்தில் நடிகை ரோஜாவின் இன்ஸ்டா சாட் பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

முன்னணி நடிகை
90களில் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடி கட்டிப்பறந்தவர் நடிகை ரோஜா. கண் அசைவால் அனைவரையும் தன்வசப்படத்தி வைத்திருந்தார் ரோஜா. பலமுன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு.

திருமணம்
திரைத்துறையில் பிரபலமாக இருக்கும் போது இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு, அன்ஷு மலிங்கா, கிருஷ்ணா லோகித் என இரண்டு குழந்தைகள் உண்டு. ரோஜா தற்போது ஒய்.சி.பி எம்.எல்.ஏவாகவும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவாக இருந்து வருகிறார்.

ரோஜாவின் மகள்
நடிகை ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா, இணையத்தில் படு ஆக்டிவாக செயல்படக்கூடியவர். அன்ஷு, தொடர்ந்து சமூக ஊடகங்களில் தனது அழகான புகைப்படங்களை பதிவிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நுழைந்த அன்ஷு, தன்னால் முடிந்த போதெல்லாம் நெட்டிசன்களுடன் அரட்டை அடிப்பார். அந்த வகையில், ஒரு நெட்டிசன் ஒருவர் ஸ்பானிஷ் மொழியில் "ஐ லவ் யூ" என்று கூறியுள்ளார்.
Recommended Video

அதிர்ச்சியூட்டும் பதில்
இதற்கு அனுஷு நன்றி என்று அதிர்ச்சியூட்டும் பதிலை பதிவிட்டுள்ளார். மேலும், தெலுங்கில் நாகார்ஜுனா திரைப்படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், சினிமாவில் நடிப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, இதுக்கு இன்னும் நிறைய வருஷம் இருக்கு அப்போது என் இதயம் என்ன சொல்லுதே அதை செய்வேன் என்று கூறியுள்ளார். நடிகை ரோஜா மகளின் இந்த சாட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











