twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அன்பு குரூப்பை ஆட்டம் காண வைக்க அடித்தளம் போடும் ஆரி.. புரமோவை பார்த்து குஜாலான நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் செம ஜாலியாகியுள்ளனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் ஆரியுடன் பேசுகிறார் பாலாஜி. அப்போது பேசும் ஆரி, உனக்கு ஷிவானி மேல அன்பு இருக்கு கரெக்ட். அதை கேம்க்குள்ள கொண்டுவராத என்கிறார்.

    பேண்ட் பட்டனை கழட்டி விட்டு சில்மிஷ போஸ்… இளசுகளை வம்பிழுக்கும் பிரபல தமிழ் நடிகை !பேண்ட் பட்டனை கழட்டி விட்டு சில்மிஷ போஸ்… இளசுகளை வம்பிழுக்கும் பிரபல தமிழ் நடிகை !

    ஒருத்தருக்காக இன்னொருத்தர் விளையாடுவதெல்லாம் தேவையில்லாதது என்றும் கூறினார். மேலும் உனக்காவது இந்த வீட்டுல பேசுறதுக்கு ஷிவானி இருக்கு, எனக்கு பேச யார் இருக்கா என்று கூறுகிறார்.

    அன்பு கேங்குக்கு ஆப்பு

    அன்பு கேங்குக்கு ஆப்பு

    அதோடு ஆரி பேசியதையெல்லாம் கேட்ட பாலாஜி அவரை கட்டியணைத்து எல்லாத்துக்கும் சாரி கேட்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் சேர்ந்து அன்பு கேங்குக்கு ஆப்பு வைக்க போவதாக தெரிவித்து வருகின்றனர்.

    பயில்வானுக்கு பாடம்

    பயில்வானுக்கு பாடம்

    மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பகையை மறந்து பயில்வானுக்கும் பாடம் நடத்தும் ஆரி! என குறிப்பிட்டுள்ளார்.

    விக்ரம் வேதா மியூஸிக்

    விக்ரம் வேதா மியூஸிக்

    புரமோவில் விக்ரம் வேதா படத்தின் மியூஸிக் ஒளிபரப்பப்பட்டதை பார்த்த இந்த நெட்டிசன், அடேய் என்னடா இது விக்ரம் வேதா மியூசிக்கா என்ன.. இப்படி எல்லாம் போட்டா பாலாஜி விஜய்சேதுபதி ஆயிடுவானா என்ன.. அடேய் பிக்பாஸ் டாஸ்க் வச்சி தொலைங்கடா இப்படி பேசிட்டே இருக்குறானுங்களே மைண்ட் கேம் தான் அதுக்குன்னு டாஸ்க் இல்லமா இப்படி பேசிட்டே இருந்தா என்னடா இது என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    பயமாவும் இருக்கு..

    பயமாவும் இருக்கு..

    மற்றொரு நெட்டிசனான இவர், பாலாஜி இன்னைக்குதான் ஆரிக்கிட்ட உண்மையா மன்னிப்பு கேட்டுருக்க மாதிரி தெரியுது.. இருந்தாலும் இங்க பேசினத எங்க போய் சொல்லி வேட்டு வைப்பானோன்னு பயமாவும் இருக்கு.. விட்டுக்கொடுத்தேன் மேட்டர் போல... என கூறியுள்ளார்.

    ஆரி பக்கம் வந்திருக்க..

    ஆரி பக்கம் வந்திருக்க..

    புரமோவில் ஆரியுடன் பாலாஜி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், பாலா இப்பதான்டா நீ ஆரி பக்கம் வந்திருக்கே.. என்று கூறியுள்ளார்.

    மிக்சர் முக்கியம் குமாரு

    மிக்சர் முக்கியம் குமாரு

    மூன்றாவது புரமோவில் ஆரியும் பாலாஜியிம் பேசிக் கொண்டிருக்க ஷிவானி எதையோ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த இந்த நெட்டிசன், மிக்சர் துன்னும் ஷிவானி!... மிக்சர் முக்கியம் குமாரு! என கலாய்த்துள்ளார்.

    பேச்சு செயல்ல இருக்கா..

    பேச்சு செயல்ல இருக்கா..

    இதெல்லாம் நல்லா தான் இருக்கு அர்ச்சனாவ பார்த்ததும் அப்படியே பம்முவாரு பாலாஜி முருகதாஸ்! பேச்சு செயல்ல இருக்கானு பாப்போம்! விக்ரமும் இல்ல வேதாவும் இல்ல! என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

    அடித்தளம் போடும் ஆரி

    அடித்தளம் போடும் ஆரி

    பாலாஜியும் ஆரியும் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், அன்பு குரூப்பை ஆட்டம் காணவைக்க அடித்தளம் போடும் ஆரி! என தெரிவித்துள்ளார்.

    தனி ஒருவன் ஆரி

    தனி ஒருவன் ஆரி

    புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் ஆரி, உனக்காவது ஷிவானி இருக்கு.. எனக்கு யாருமே இல்லையேடா என்று கூறியதை குறிப்பிட்டு தனி ஒருவன் ஆரி என தெரிவித்துள்ளார்.

     சமயம் பார்க்கிறாரா பயில்வான்?

    சமயம் பார்க்கிறாரா பயில்வான்?

    புரமோவில் ஆரியை பலாஜி கட்டியணைக்கும் காட்சியை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், முதுகில் குத்த சமயம் பார்க்கிறாரா பயில்வான்? என குறிப்பிட்டுள்ளார்.

    Recommended Video

    விஜய் சேதுபதியுடன் இணைந்த சம்யுக்தா | Tughlaq Durbar
    மிக்சர் கேங்குதான்..

    மிக்சர் கேங்குதான்..

    இனி ஒன்னும் கிழிக்க முடியாது.. நன்றி வணக்கம்.. இனித் தட்டுறதும் தூக்குறதும் அந்த மிக்சர் கேங்காகத் தான் இருக்கும் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

    English summary
    Netizens reactions over Biggboss Third Promo. Netizen says Aari and Balaji going shakes up the Anbu Gang.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X