அப்படியே ஆரி ப்ரோவை காப்பி பண்றாப்ல தம்பி பாலா.. இரண்டாவது ப்ரோமோவை பார்த்து பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜியை பங்கம் பண்ணி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் பாலாஜி காப்பாற்றப்பட்டதாக கூறினார் கமல். இதனைக் கேட்ட பாலாஜி, நேற்று ஆரி செய்ததை போலவே தரையில் அடித்து கண்ணீர் விட்டார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜியை துவம்சம் செய்து வருகின்றனர். நேற்று ஆரி தட்டிய போது பாலாஜியின் ரசிகர்கள் ஆரியை கேலி செய்ததையும் வச்சு செய்து வருகின்றனர். மேலும் பாலாஜி நடிப்பதாகவும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

முட்டு மேல் முட்டு

முட்டு மேல் முட்டு

கமல் ஆரம்பத்தில் இருந்தே பாலாஜிக்கு ஆதரவாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் இன்றைய ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், பல்பு பாலாவுக்கு முட்டு மேல் முட்டு கொடுக்கும் ஆண்டவர்.. ஏன்? என்னத்துக்கு? எப்படி? என கேட்டுள்ளார்.

வீக்கெண்ட் ஆனாலே இப்படியா?

வீக்கெண்ட் ஆனாலே இப்படியா?

பாலாஜி தரையில் விழுந்து அழுவதை பார்த்த இந்த நெட்டிசன், அப்படியே ஆரி ப்ரோவை காப்பி பண்றாப்ல தம்பி பாலா. எப்பிடிப்பா வீக்கெண்ட் ஆனா இப்படி ஓவரா சேஞ்ச் ஆகுறப்பா பாலா? நாங்க உன் டிராமவை நம்ப மாட்டோம் என விளாசியுள்ளார்.

ஓயமாட்டோம்..

ஓயமாட்டோம்..

ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், எப்படி எப்படியெல்லாம் ஆரியின் பேரை ரிப்பேர் பண்ணமுடியுமான்னு பார்த்தாரு இந்த பிக்பாசு! அது முடியாமபோச்சு! ஆரி புகழ் விண்ணை தாண்டிவிட்டது! நாங்க ஆரிக்கு டைட்டில் வாங்கி தராம ஓயமாட்டோம்! அப்பதான் அந்த கப்புக்கு மரியாதை என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

நல்லாயிருக்காது.. சொல்லிட்டேன்..

நல்லாயிருக்காது.. சொல்லிட்டேன்..

இன்றைய எபிசோடில் ஆரிக்கு போன் கால் வரும் என்று வெளியான தகவலை அறிந்த இந்த நெட்டிசன், யோவ் பிக்பாசு! ஆரிக்கு இரண்டாவதாக போன் கால் பண்றீங்களாமே! என்ன விசயம்? நெகட்டிவ்வாக கொண்டு போறமாதிரி ஏதாவது பண்ணினே நல்லாயிருக்காது! ஆமா சொல்லிட்டேன்! என பதிவிட்டுள்ளார்.

சோம் அன்ட் அன்பு கேங்

சோம் அன்ட் அன்பு கேங்

பாலாஜி காப்பாற்றப்பட்டதை கேட்டதும், ரியோ மற்றும் சோம் சந்தோஷத்தில் கைகளை தட்டி ஆரவாரம் செய்வதை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி காப்பாற்றப்படும் போது இந்த மகிழ்ச்சி எங்கடா போச்சு? சோம் அன்ட் அன்பு கேங் என்று பதிவிட்டுள்ளார்.

வொர்ஸ்ட் ஃபெலோஸ்..

வொர்ஸ்ட் ஃபெலோஸ்..

ஆரிக்காக அன்பு கேங்க் சந்தோஷப்படாததை பார்த்த இந்த நெட்டிசன், அந்த கூட்டம் ஆரிக்காக மகிழ்ந்தால்தான் நாம் சந்தேகப்படனும்... அவனுக்கு அந்த வெறுப்பிலேயே இருக்கட்டும்... வெளியே வந்து ஆரிக்கு இருக்கும் ஆதரவை பார்த்தபின் மொத்த அன்பு கூட்டமும் கதறப்போறனுங்க.. வொர்ஸ்ட் ஃபெலோஸ்.. என விளாசியுள்ளார்.

மக்களால் காப்பாற்றப்பட்டவரல்ல

மக்களால் காப்பாற்றப்பட்டவரல்ல

இன்றைய இரண்டாவது ப்ரோமோவைப் பார்த்த இந்த நெட்டிசன், மக்களால் காப்பற்றபட்ட இரண்டாவது ஃபைனலிஸ்ட் பாலாஜி. சோம் மக்களால் காப்பற்றபட்டவரல்ல என கூறியுள்ளார்.

மூஞ்சிய எங்க வச்சுப்பீங்க?

மூஞ்சிய எங்க வச்சுப்பீங்க?

இன்றைய ப்ரோமோவைப் பார்த்த இந்த நெட்டிசன், நேத்து ஆரி தரையை அடிச்சதுக்கு கிண்டல் பண்ணாங்க பாலா ரசிகர்கள். இப்போ பாலா தரையை அடிக்கிறார்.. இப்ப உங்க மூஞ்சிய எங்க வச்சுப்பீங்க என்று கேட்டுள்ளார்,

ஆரியை கேளி செய்தவர்கள்..

ஆரியை கேளி செய்தவர்கள்..

இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் பாலாஜி தரையை தட்டுவதை பார்த்த இந்த நெட்டிசன், நேத்து ஆரிய கேலி செய்தவன்லாம் இன்னைக்கு எங்க காணோம் என கேட்டுள்ளார்.

முதல் கை ஆரியின் கை

முதல் கை ஆரியின் கை

பாலாஜி தரையில் அடித்து கதறும்போது அவரை ஆசுவாசப்படுத்த ஆரி முதல் ஆளாக வந்ததை பார்த்த இந்த நெட்டிசன், பாலாவை நோக்கி முன்னே வரும் முதல் கை ஆரியின் கை.. ஆரியின் ரசிகனாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X