அப்போ இந்த வாரம்.. மொக்கையாதான் இருக்கும் போல.. புரமோவை பார்த்து காண்டாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் காண்டாகியுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் பழைய போட்டியாளர்கள் சிலர் விருந்தாளிகளாக வந்துள்ளனர். முதல் புரமோவில் சைலன்ட்டாக உள்ளே வந்த அவர்கள் இரண்டாவது புரமோவில் செம ஆட்டம் போட்டுள்ளனர்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போன பிறகு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.

ஞாபகத்துக்கு வருது
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரம்யா எங்க உங்க ஃபிரண்ட்ஸ்னு ஆரியை கேட்டது தான் நியாயபகத்துக்கு வருது! எவ்ளோ டார்ச்சர் வேணா பண்ணுங்க மிச்சமிருக்க 5 நாளும்! உள்ளே வந்த ஒருத்தருக்கு ஆரியை பிடிக்காது.. நிஷாவும் ரேகாவும் அவரிடம் அன்பாக இருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

காண்டு ஆகுதுப்பா
அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், இந்த ஓவர் அலட்டல் குருப்பை கண்டாலே ஏனோ காண்டு ஆகுதுப்பா.. என பதிவிட்டுள்ளார்.

ஸ்க்ரீப்ட் போல இருக்கு
இரண்டாவது புரமோவில் நிஷாவும் ரம்யாவும் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், இப்ப இந்த காண்டு மம்மி குரூப்பு பண்ணுவதுதான் ஸ்கிரிப்ட் போல இருக்கு குமாரு என பதிவிட்டுள்ளார்.

மொக்கையாதான் இருக்கும்
பழைய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவதை பார்த்த இந்த நெட்டிசன், அப்போ இந்த வாரம்.. மொக்கையா தான் இருக்கும் போல என பதிவிட்டுள்ளார்.

கடவுள் இருக்கான் குமாரு
பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா பேசிய டயலாக்கை பதிவிட்டுள்ள இந்த நெட்டிசன், கடவுள் இருக்கான் குமாரு.. இந்த கொடுமையெல்லாம் பார்க்க முடியாமதான் சீக்கிரம் எவிக்ட் பண்ணிட்டாரு போல என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











