நிரந்தரமானவன் அழிவதில்லை.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. தீர்க்கதரிசி கண்ணதாசன் பிறந்தநாள்!

சென்னை: கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் அவரது கவிதைகளை நினைவு கூர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கவியரசர் கண்ணதாசனின் 92வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபாய் பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் நெட்டிசன்களும் கண்ணதாசனின் பிறந்தநாளை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக கவியரசரின் வாழ்க்கை தத்துவ கவிதைகளை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எனக்கு மரணமில்லை

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை-கவியரசு கண்ணதாசன்.

மனம் இருப்பதில்லை

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்
கவியரசு கண்ணதாசன்

உண்டென்று காட்டிவிட்டான்

உள்ளத்தின் உள் விளங்கி உள்ளுக்குள்ளே அடங்கி
உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன்..
ஓர் உருவமில்லா அவன்தான் இறைவன்..

நிழலும் கூட மிதிக்கும்

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்.

இருவரின் துடிப்பினிலே

ஒருவரின் துடிப்பினிலே.
விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே.
விளைவது மழலையடா
ஈரேழு மொழிகளிலே.
என்ன மொழி பிள்ளைமொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி.
தேவன் தந்த தெய்வ மொழி
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

கவிதைக்கு ராஜா கண்ணதாசன்!

காட்டுக்கு ராஜா, சிங்கம்.
கவிதைக்கு ராஜா,
கண்ணதாசன்!"
பெருந்தலைவர்
காமராஜரின் வாக்கு இது
"ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு!"
நான் நிரந்தரமானவன், அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" அதுபோல் இன்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

நினைத்து பார்த்து நிம்மதி நாடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்னுடைய ஃபேவரைட் மற்றும் ஊக்கப்படுத்தும் வரிகள்.. பிறந்த நாள் வாழ்த்துகள் கண்ணதாசன் அய்யா

அழிவதில்லை

நிரந்தரமானவன்
அழிவதில்லை
எந்த நிலையிலும்,
அவனுக்கு மரணமில்லை.

காரணம் விளங்கும்

காலங்களாலே காரியம் பிறக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்

வழியா இல்லை பூமியில்

#கண்ணதாசன்
இன்று கவியரசர் பிறந்தநாள்
‘செத்துப் போயிடலாம்' என்ற நினைப்பில் இருப்பவர்கள், ‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' பாடலைக் கேட்டால் போதும். உற்சாகம் பீரிட்டுக் கிளம்பும். என்கிறார் இந்த நெட்டிசன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X