கடலை போடுற சாக்குல அந்த வாயில்லா பூச்சியை ஏமாத்திடாதப்பா.. பாலாஜியால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை: காதல் கண்ணை மறைக்குது என்ற ஒற்றை வார்த்தையை பிடித்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டையே ரணகளமாக்கி வருகிறார்.
பாலாஜியின் நடவடிக்கைகளால் ஹவுஸ்மெட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களும் கடுப்பாகியுள்ளனர். ஷிவானியுடன் ரொம்பவே நெருக்கமாக இருந்துவிட்டு தற்போது அவரை காதலிக்கவில்லை என்று கூறிவிட்டார் பாலாஜி.
பாலாஜி சொன்தை கேட்டு அதிர்ச்சியாகியுள்ளார் ஷிவானி. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஷிவானியை ஏமாற்றி விடாதீர்கள் என்றும் அப்போது நெருக்கமாக இருந்ததற்கு பெயர் என்ன என்றும் கேட்டு வருகின்றனர்.

திமிரு புடிச்சு நடக்கக்கூடாது
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டேய் பாலா இப்போ தெரியுது டா....நீ ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்று வந்த போது ஒரு மீடியாவும் உன்னை கண்டுகொள்ளவில்லை என்பதற்கு காரணம் உன்னுடைய பழக்கவழக்கங்கள் தான்.. இப்படி திமிரு புடிச்ச நடக்கக் கூடாது.. என கூறியுள்ளார்.

பண்ணாடை பயில்வான்
மற்றொரு நெட்டிசனான இவர், காதல்னு சொன்னதற்கு இந்த பண்ணாடை பயில்வான் இப்படி பொங்குறான்.. என விளாசியுள்ளார்.

தப்பாயிடும்..
பிக்பாஸ் நிகழ்ச்சின் மூன்றாவது புரமோவில் ஏதாவது ஒன்ன உடைக்கட்டுமா தப்பாயிடும்.. என பாலாஜி கூறியதை குறிப்பிட்டுள்ள இந்த நெட்டிசன், அடேய் பாலாஜி இந்த வாய் மட்டும் இல்லைனா உன்ன எல்லாம்.. ரியோ மறுபடியும் பழைய மாதிரி பேச ஆரம்பிக்குறான்.. ஆனா ஒன்னு ரெண்டு பேரும் ஒரு கூட்டத்தை வச்சிட்டு நல்லா காமெடி பண்ணுறீங்கடா என கலாய்த்துள்ளார்.

சமாதானம் பண்ணுப்பா..
மற்றொரு நெட்டிசனான இவர், எப்பா கேப்டன் ஆஜித்து! .. சீக்கிரம் சண்டையை சமாதானம் பண்ணுப்பா! சிலைமாதிரியே நிக்கிறியேப்பா என கூறியுள்ளார்.

பொத்துக்கிட்டு வருதே
புரமோவில் பாலாஜி கோபப்படுவதை பார்த்த இந்த நெட்டிசன், காட்டு மிருகத்திற்குதான் கண்டபடி கோபம் வரும்.. ஆனா பயில்வானுக்கும் பொத்துகிட்டு வருதே.. என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஏமாத்திடாதப்பா..
மற்றொரு நெட்டிசனான இவர் யோவ் பயில்வான் காதல்னு சொன்ன எதுக்கப்பா உனக்கு அப்படி கோபம் வருது?... கடலை போடுற சாக்குல அந்த வாயில்லா பூச்சியை ஏமாத்திடாதப்பா.. என கூறியுள்ளார்.

புலுகுமூட்ட பயில்வான்
மற்றொரு நெட்டிசனான இவர், பாலாஜி மடியில படுத்துப்பாராம் உடம்ப துணி இல்லாத இடமா பார்த்து உரசுவாராம். விடிய விடிய உட்கார்ந்து பேசுவாராம் ஆனா அது லவ் இல்லையாம். புலுகுமூட்ட பயில்வான் காமெடி சூப்பர் என கலாய்த்துள்ளார்.

ஜாலியா இருக்கும்
"சிடுமூஞ்சி மேக்ஸ் அப்படின்னு யாரு சொன்னது" ன்னு ஒரு பக்கம் அனிதா ஆரம்பிச்சா செம ஜாலியா இருக்கும் என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











