மகளுக்கும் பிகினி மாட்டி விட்ட பிரபல நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
மாலத்தீவு: பிரபல ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோவின் மகள் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
டேனியல் கிரெய்க் நடிப்பில் வெளியான கேசினோ ராயல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானவர் அலெஸாண்ட்ரா.
விக்டோரியா சீக்ரெட் மாடல் அழகியாக பல ஆண்டு காலம் உள்ளாடை விளம்பரங்களில் நடித்து கலக்கியவர் இவர்.

கழுத்தில் துண்டு போட்டு
மேலாடை ஏதும் அணியாமல் கழுத்தில் துண்டு மட்டும் போட்டுக் கொண்டு சமீபத்தில் நடிகை அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ கொடுத்த ஹாட் பிக்கை பார்த்து ஹாலிவுட் ரசிகர்கள் பலரும் அதிர்ந்தே போய்விட்டனர். சைக்கிள் அருகே நின்றபடி புருவத்தை உயர்த்தி ஷார்ப்பான விழிகளால் நோக்கு வர்மம் செய்த அலெஸாண்ட்ராவின் அந்த புகைப்படத்தை ரித்திகா சிங் வரை லைக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிகினியில் படுகவர்ச்சி
டாப்லெஸ் புகைப்படங்களால் மட்டும் இன்றி பிகினி அணிந்த புகைப்படங்களையும் பதிவிட்டு, ரசிகர்களை கிறங்கடிக்கும் வித்தை நன்கு கற்று வைத்துள்ளவர் இந்த ஜேம்ஸ்பாண்ட் நடிகை. இப்போ மாலத்தீவில் தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள புகைப்படங்களை எல்லாம் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

மகளுக்கும் பிகினி
2005ம் ஆண்டு ஜாமி மசூர் எனும் அமெரிக்க தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அலெஸாண்ட்ராவுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்த அவர், தற்போது தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். 12 வயதாகும் அலெஸாண்ட்ராவின் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு மாலத்தீவில் பிகினியுடன் அவர் இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை பதிவிட்டுள்ளார்.

அதிசய வானவில்
பிறந்தநாளை முன்னிட்டு மஞ்சள் நிற பிகினி உடையை அணிந்து கொண்டு பலூன்கள் சூழ மாலத்தீவு ரெசார்ட் ஒன்றின் நீச்சல் குளம் அருகே பிறந்தநாளை கொண்டாடும் போது எடுக்கப்பட்ட போட்டவில் அனிச்சையாய் அதிசயமான வானவில் க்ளிக்காக, அதனை ஹாலிவுட் ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து, உங்க பொண்ணுக்கும் உங்களை போல நல்ல எதிர்காலம் இருக்கு என பாராட்டி வருகின்றனர்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
மகளுக்கும் இந்த வயசுலயே பிகினி மாட்டி விட்டு மாடல் ஆக ஏன் பார்க்குறீங்க, அந்த சின்ன பெண்ணை நல்லா படிக்க வச்சு ஆளாக்குங்க என்றும் சில நெட்டிசன்கள் அலெசாண்ட்ராவின் செயலை கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அடுத்த அடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் ஆம்ப்ரோஸ்யோ.


Click it and Unblock the Notifications











