twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படுக்கை அறையில் படுத்துக் கொண்டு போஸ் கொடுத்த ரைசா.. வீக்கம் சரியாகிடுச்சான்னு விசாரிக்கும் ஃபேன்ஸ்

    |

    சென்னை: வீங்கிய முகத்துடன் போட்டோ போட்டு டாக்டர் பைரவி தான் இப்படி பண்ணிட்டாங்க என புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பிய நடிகை ரைசா வில்சன், தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    ட்விட்டரில் நடிகை ரைசா வில்சன் படுக்கை அறையில் படுத்துக் கொண்டு ரசிகர்களுக்கு 'ஹே' என அட்டன்டன்ஸ் போட அவரது ரசிகர்கள் வரிசைக் கட்டி வந்து வீக்கம் குறைந்து விட்டதா என்று விசாரித்து வருகின்றனர்.

    லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்திலிருந்து மற்றொரு முக்கிய பிரமுகர் விலகல் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்திலிருந்து மற்றொரு முக்கிய பிரமுகர் விலகல்

    சில சில்மிஷக்கார நெட்டிசன்களோ நடிகை ரைசா வில்சனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

    வீங்கிய முகம்

    வீங்கிய முகம்

    ஸ்லிம் பியூட்டியான ரைசா வில்சன் தனது அழகான முகத்தை மேலும் அழகுப்படுத்துகிறேன் என்கிற பேர் வழியில் மருத்துவர் வனஜாவை நாட அவர் செய்த சிகிச்சையின் பலனாக அழகா இருந்த ரைசா வில்சனின் முகம் அகோரமாக மாறி வீங்கியது தான் மிச்சம் என என அதிரடி பதிவு போட்டு டாக்டர் பைரவி மீது குற்றம்சாட்டி இருந்தார் ரைசா வில்சன்.

    ஒரு கோடி கொடுக்கணும்

    ஒரு கோடி கொடுக்கணும்

    மேலும், தனது உயிரே அவரது தவறான சிகிச்சையின் காரணமாக போயிருக்கக் கூடும் என்றும், தன்னை இப்படி ஆக்கியதற்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்கணும் என நடிகை ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் போட்டிருந்தது பலரையும் ஷாக் ஆக்கியது.

    குடிபோதைதான் காரணம்

    குடிபோதைதான் காரணம்

    நடிகை ரைசா வில்சனின் இந்த குற்றச்சாட்டை மறுத்த மருத்துவர் பைரவி, அவருக்கு முறையான சிகிச்சை தான் வழங்கப்பட்டது. ஆனால், அந்த சிகிச்சை செய்த பின்னர் மது அருந்தாமல் இருக்கணும். அவரது மது பழக்கம் தான் அவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது என பிளேட்டை ரைசா பக்கம் திருப்பி விட்டு என் பெயரை கெடுத்ததற்காக ரைசா தான் எனக்கு ஒன்றரை கோடி கொடுக்கணும் என சும்மா கோடிகளில் இருவரும் விளையாட ஆரம்பித்தனர்.

    படுக்கையறையில் போஸ்

    படுக்கையறையில் போஸ்

    இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை ரைசா வில்சன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் படுக்கை அறையில் படுத்துக் கொண்டே எடுத்த செல்பி போட்டோவை போட்டு தனது முகம் சீராகி வருவதை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அந்த போட்டோவை பார்த்ததும் ரைசா ரசிகர்கள் வரிசைக்கட்டி வந்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    வீக்கம் சரியாகிடுச்சா

    வீக்கம் சரியாகிடுச்சா

    நடிகை ரைசாவின் அழகிய போட்டோவை பார்த்த ரசிகர்கள் வீக்கம் குறைந்து விட்டதா? கண்களும் கன்னமும் நலமா என விசாரித்து வருகின்றனர். மீண்டும் உங்களை இப்படி பழையபடி செம அழகாக பார்ப்பதே ரொம்ப சந்தோசமா இருக்கு ரைசா என்றும் ரசிகர்கள் வர்ணிக்க கிளம்பி விட்டனர்.

    பார்லருக்கு போகாதீங்க

    பார்லருக்கு போகாதீங்க

    இனிமே எந்த பார்லர் பக்கமும் போகாதீங்க என்றும், மறுபடியும் ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டீங்களா? இனிமே பீர் குடிக்காதீங்க ரைசா என்றும் இது ரைசா மாதிரியே தெரியலையே? வேற சைசலா இருக்கு என சில நெட்டிசன்கள் ரைசா வில்சனின் இந்த போட்டோவை பார்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

    English summary
    Raiza Wilson shares an super cool image of herself after the face scar issue. Many fans congrats her for a super comeback and some haters trolls her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X