பொண்டாட்டியை மறந்துட்டீங்களே.. ராத்திரிக்கு சோறு கிடைக்காதே.. சூரியை பங்கமாக்கிய ரசிகர்கள்!

சென்னை: காலையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் தொடங்கி ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் மகளிர் தின கொண்டாட்ட வாழ்த்துக்கள் தான் குவிந்து வருகிறது.

ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திய பெண்களுக்கு இந்த நல்ல நாளில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நடிகர் சூரி தனது மகளுடன் இருக்கும் ஒரு வீடியோவை ஷேர் செய்து மகளிர் தின வாழ்த்துக்களை சொல்ல, நெட்டிசன்கள் வேற மாறி ட்ரோல் செய்து வருகின்றனர்.

 மகளிர் தின மீம்ஸ்

மகளிர் தின மீம்ஸ்

ஒரு பக்கம் மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில், இன்னொரு பக்கம் மகளிர் தினத்தை கலாய்க்கும் விதமாக ஏகப்பட்ட மீம்களும் சமூக வலைதளங்களை ஆட்சி செய்து வருகின்றன. மகளிர் தினத்துக்கு மட்டும் வாழ்த்துவது மற்ற தினங்களில் எல்லாம் அவர்களை மதிப்பதே இல்லை என்றும் கலாய்த்து வருகின்றனர்.

மகளுடன் சூரி

மகளுடன் சூரி

"என்ன பெத்த தாய் க்கும், நான் பெத்த தாய் க்கும் மற்றும் எல்லா தாய்மார்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்" என நடிகர் சூரி மகளிர் தின வாழ்த்துடன் சேர்த்து தனது மகளுக்கு தலை துவட்டிவிடும் வீடியோ ஒன்றையும் ஷேர் செய்து லைக்குகளையும் ஹார்ட்டின்களையும் அள்ளி உள்ளார். ஆனால், அதே சமயம் நடிகர் சூரியை அவரது வாழ்த்தை வைத்தே பலரும் கலாய்த்து வருகின்றனர்.

அன்னையர் தினம் இல்லை

அன்னையர் தினம் இல்லை

சூரி அண்ணே! இன்னைக்கு அன்னையர் தினம் இல்லை.. அனைத்து தாய்மார்களுக்கும் வாழ்த்துக்கள் என போட்டு இருக்கீங்களே என சில நெட்டிசன்கள் சூரியின் மகளிர் தின வாழ்த்து ட்வீட்டில் குற்றம் கண்டுபிடித்து கலாய்த்து வருகின்றனர்.

பொண்டாட்டியை மறந்துட்டீங்களே

பொண்டாட்டியை மறந்துட்டீங்களே

தனது அம்மாவுக்கும் தனது மகளுக்கும் நடிகர் சூரி வாழ்த்து சொன்ன நிலையில், உங்க பொண்டாட்டிக்கு மகளிர் தின வாழ்த்துக்களை சொல்லவே இல்லையே சூரி, ராத்திரிக்கு அப்புறம் சோறு கிடைக்காது பார்த்துக்கோங்க என சாபம் விடாத குறையாக பங்கமாக ட்ரோல் செய்துள்ளனர்.

விடுதலை எப்போ

விடுதலை எப்போ

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் எப்போ தான் சார் ரிலீசாகும் என்றும் சூரியின் சினிமா ரசிகர்கள் அவரிடம் அப்டேட் கேட்டு வருகின்றனர். நகைச்சுவை நடிகராகவும் நாயகனாகவும் மாறி உள்ள சூரி கடைசியாக அண்ணாத்த, வேலன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். விரைவில் சூரி நடிப்பில் பல படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X