twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    90களில் பிரபலமாக ஓடிய அந்த படத்தின் காப்பியா வலிமை? கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்கள்!

    |

    சென்னை: வலிமை திரைப்படத்தின் கதை அரத பழசான கதை என பலரும் பல படங்களை உதாரணமாக சொல்லி வரும் நிலையில், 90களில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ஒரு படத்தின் அப்பட்டமான காப்பி தான் இந்த படம் என நெட்டிசன்கள் கம்பேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

    சமீபத்தில் வெளியான சில படங்கள் எல்லாமே பழைய படத்தின் காப்பி என கிண்டல் செய்து வரும் நிலையில், அதே ரூட்டை இயக்குநர் எச். வினோத்தும் பின்பற்றி விட்டாரே என நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

    திலீப் சுப்புராயன் மாஸ்டர் மற்றும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு மட்டுமே வலிமை படத்தை காப்பாற்றியுள்ளது என்றும் இருவருக்கும் தனி பாராட்டுக்களையும் கொடுத்து வருகின்றனர்.

    விஜய் டிவியின் புதிய சீரியல்... நடிகர்கள் குறித்து சீக்ரெட்டாக வைத்துள்ள படக்குழு விஜய் டிவியின் புதிய சீரியல்... நடிகர்கள் குறித்து சீக்ரெட்டாக வைத்துள்ள படக்குழு

    கலவையான விமர்சனங்கள்

    கலவையான விமர்சனங்கள்

    ரஜினி, விஜய், அஜித் என பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானாலே கலவையான விமர்சனங்கள் வருவது சகஜம் தான். அனைவரையும் திருப்திப்படுத்த நினைத்து எடுத்துக் கொண்ட கதையை மட்டும் நோக்கி செல்லாமல் அவர்கள் திசை மாறுவதே இப்படி படங்கள் முதல் பாதி சூப்பராகவும் இரண்டாம் பாதி சுமாராகவும் மாற காரணம் ஆகி விடுகிறது. மேலும், அவர்களின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் உருவாகும் அதீத எதிர்பார்ப்பும் பெரிய பிரச்சனையை உருவாக்குகிறது.

    காப்பி பிரச்சனை

    காப்பி பிரச்சனை

    ஒரு ஃபர்ஸ்ட் லுக் வந்தாலும், இது இந்த ஹாலிவுட் பட போஸ்டரில் வந்தது என கண்டுபிடித்து விடுகின்றனர். ஒரு புதிய பாடல் வெளியானாலும், இந்த பாடலின் இசை இங்கிருந்து சுடப்பட்டது என்றும் கலாய்க்க தொடங்கி விடுகின்றனர். திரைப்படம் வெளியானதும் அந்த படத்தின் கதை எந்த படத்தின் காப்பி என்கிற பிரச்சனையும் எத்தனை படங்களின் கலவை என்கிற பட்டியலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிக போட்டி காரணமாகவே எழுந்து வருகின்றன. எந்த படத்தின் காப்பியாக இருந்தாலும், இன்ஸ்பிரேஷனாக இருந்தாலும், கச்சிதமாக இருந்தால் அந்த படம் ஹிட் ஆகிவிடும். ஆனால், அதில் சில சொதப்பல்கள் இருந்தால், படத்திற்கு பின்னடைவு ஏற்படுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

    வால்டர் வெற்றிவேல்

    வால்டர் வெற்றிவேல்

    வால்டர் வெற்றிவேல் படத்தின் அப்பட்டமான காப்பிதான் வலிமை படம் என நெட்டிசன்கள் அஜித் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர். பி வாசு இயக்கத்தில் சத்யராஜ், சுகன்யா நடிப்பில் 1993ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் வால்டர் வெற்றிவேல். இப்படத்தில் சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அதேபோல் வலிமை படத்தில் அஜித்தும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

    வில்லனாகும் தம்பி

    வில்லனாகும் தம்பி

    வால்டர் வெற்றிவேல் படத்தில் தம்பி அப்பாவி போல் நடித்து வில்லனாக இருப்பார். அதேபோல் வலிமை படமும் உள்ளது. இந்த இரண்டு படங்களிலும் சண்டைக் காட்சிகள் மட்டும்தான் வேறுவிதமாக உள்ளது. வலிமை படத்தில் அதிக ஸ்டன்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் வால்டர் வெற்றிவேல் படத்தை இப்ப உள்ள ட்ரெண்டை போல் எடுத்துள்ளார் வினோத் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    பல படங்கள்

    பல படங்கள்

    இதே அண்ணன் போலீஸ் தம்பி வில்லன், தம்பி போலீஸ் அண்ணன் வில்லன் என ஏகப்பட்ட கதைகள் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி உலகளவில் பல படங்கள் வந்துள்ளன. ஆனால், போர் அடிக்கும் விதமாக எடுக்கப்பட்டதும், தேவையில்லாத திணிப்பு காட்சிகளும் தான் படத்தின் மீதான ஈர்ப்பை இழக்க வைத்து விட்டது என பொதுவான விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.

    English summary
    Netizen trolls Ajith Kumar Valimai is a exact copycat of Sathyaraj’s 90’s superhit movie Walter Vetrivel movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X