F1 சூர்யா - தனுஷ் நடிச்சா எப்படி இருக்கும்.. வேற லெவல்ல படம் காட்டுறாங்களே.. எல்லாம் டெக்னாலஜி!

சென்னை: ஏ.ஐ தொழில் நுட்பத்தை வைத்துக் கொண்டு நமது இணையவாசிகள் விளையாடி வருகிறார்கள். ஏ.ஐ. மூலம் இணையவாசிகள் உருவாக்கும் சில புகைப்படங்களும் வீடியோக்களும் மொத்தமாக டைம் டிராவல் செய்து அந்த சம்பவங்களைப் பார்ப்பது போல இருக்கிறது. இப்படி இருக்கும்போது, நடிகர்கள் நடிகைகளை வைத்து உருவாக்கும் ஏ.ஐ புகைப்படங்களும் வீடியோக்களும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமா நடிகர்களான சூர்யா மற்றும் தனுஷ் என இருவரும் இணைந்து F1 படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவாக்கப்பட்டுள்ள வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

F1 படமானது இந்த ஆண்டு வெளியான பார்முலா 1 கார் ரேஸ் பந்தயத்தை மையமாகக் கொண்டு வெளியான ஹாலிவுட் படம். இந்த படத்தில் பிராட் பிட் நடித்திருந்தார். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழில் இதுபோல கார் பந்தயம் குறித்த படத்தை எடுக்க வேண்டும் என்றால் அதில் இந்திய சினிமாவில் இருக்கக்கூடிய நடிகர்கள் என்றால் அது நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகர் நாக சைதன்யா என இருவரை குறிப்பிடலாம். இவர்கள் இருவருக்கும் கார் ரேஸிங்கில் அதிகப்படியான ஆர்வம் உள்ளது. மேலும் போட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்கள். இதில் நடிகர் அஜித் சர்வதேச அளவிலும் ஆசிய அளவிலுமான கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

Netizen Who Created AI Video For F1 Race Movie Suriya And Dhanush Acts As IF Car Race Drivers
Photo Credit:

இவர்கள் நடித்தால்: அதேபோல் கதாநாயகிகளில் எடுத்துக் கொண்டால் நடிகை நிவேதா பெத்துராஜைச் சொல்லலாம். இவர்கள் மூவரையும் வைத்து படத்தை எடுத்தால் இயக்குநருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் கொஞ்சம் சவால் குறைவானதாக இருக்கும் என்று கூறலாம். ஆனால் F1 படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் நடித்தால் எப்படி இருக்கும் என்று என்றைக்காவது கற்பனை செய்து பார்த்ததுண்டா?

தனுஷ் - சூர்யா: இப்படி ஒரு இணைய வாசி யோசித்ததன் விளைவு தான், அவர்கள் இருவரும் இணைந்து F1 படத்தில் நடித்தால் படம் எப்படி இருக்கும் என்பதன் ஏ.ஐ வீடியோ. கிட்டத்தட்ட இருவரும் இணைந்து நடித்தால், அந்த படத்தின் டிரைலர் எப்படி இருக்கும் என்பது போல வீடியோவை உருவாக்கி உள்ளார், இந்த வீடியோவை உருவாக்கிய யோக ஈஸ்வர் என்ற இணைய வாசி.

Netizen Who Created AI Video For F1 Race Movie Suriya And Dhanush Acts As IF Car Race Drivers
Photo Credit:

தரமான வீடியோ: சூர்யாவும் தனுஷும் கார் ரேஸர்களாகவும் மாதவன் அவர்களின் பயிற்சியாளராகவும் நடித்திருப்பது போல வீடியோவை உருவாக்கி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படி ஒரு படம் வந்தாலும் சிறப்பாக இருக்குமே என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X