சவுகிதாருக்கு போட்டி வந்தாச்சு: பெயருக்கு முன்பு கான்டிராக்டரை சேர்க்கும் நேசமணியன்ஸ்
Recommended Video
சென்னை:நேசமணியை கவுரவிக்கும் வகையில் நெட்டிசன்கள் தங்களின் பெயருக்கு முன்பு கான்டிராக்டர் என்ற வார்த்தைய சேர்த்து வருகிறார்கள்.
நேற்று இரவில் இருந்து உலக அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறார் கான்டிராக்டர் நேசமணி. வடிவேலுவின் அந்த கதாபாத்திரத்தை மறக்கத் தான் முடியுமா. இந்நிலையில் தான் தலையில் சுத்தியல் விழுந்ததால் சுயநினைவை இழந்த நேசமணிக்காக உலகமே பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது.
ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மக்கள் இந்த அளவுக்கு இதுவரை சிரித்து சந்தோஷமாக இருந்தது இல்லை. நேசமணிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
கான்டிராக்டர்
நம்மை எல்லாம் சிரிக்க வைத்துவிட்டு மருத்துவமனையில் இருக்கும் நேசமணியை கவுரவிக்கும் வகையில் நெட்டிசன்கள் தங்களின் பெயருக்கு முன்பு கான்டிராக்டர் என்ற வார்த்தையை சேர்த்து வருகிறார்கள். முன்பு சவுகிதார் என்ற வார்த்தையை பெயருக்கு முன்பு சேர்த்த நிலை மாறி தற்போது கான்டிராக்டரை பெருமையுடன் சேர்க்கிறார்கள்.
நேசமணி
கான்டிராக்டர் நேசமணி பிரதமர் நரேந்திர மோடிக்கே ட்விட்டரில் டஃப் கொடுக்கிறார். மோடிக்கு முக்கியமான நாளான இன்று ட்விட்டரில் மக்கள் நேசமணியை பற்றித் தான் அதிகம் பேசுகிறார்கள். திரும்பும் பக்கம் எல்லாம் நேசமணி மீம்ஸ் தான். இல்லை என்றால் நேசமணிக்காக பிரார்த்தனை செய்து ட்வீட் போடுகிறார்கள்.
சிரிப்பு
வெறுப்பை கக்கும் சமூக வலைதளத்தில் மக்கள் இன்று ஜாலியாக சிரித்துப் பேசுவதற்கு நம் தமிழக தங்கம் அண்ணன் கான்டிராக்டர் நேசமணியே காரணம். சிரித்து சிரித்து நிறையே பேருக்கு வயிறு வலியே வந்துவிட்டது. அடப்பாவிகளா, நான் ட்விட்டரில் இந்த அளவுக்கு சிரித்ததே இல்லடா என்று சொல்லாதவர்கள் இல்லை.
கிண்டல்
உயிரே போனாலும் கான்டிராக்டர் தொழிலை மட்டும் விட்டுவிடாதீர்கள் நேசமணி என்று ஜீவானந்தம் கதறினாராம். நெட்டிசன்கள் இன்று நேசமணியை சும்மாவிடுவதாக இல்லை. தமிழர்கள் நேசமணியை பற்றி ட்வீட் போட வெளிநாட்டவர்களோ ஹூ இஸ் திஸ் நேசமணி என்று கேட்கிறார்கள். பாவம், அவர்களுக்கு நம் லெஜன்ட் நேசமணியின் அருமை தெரியாமல் குழம்புகிறார்கள்.
நடிப்பு
வடிவேலு படங்களில் நடிக்காவிட்டாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். வடிவேலு மட்டும் ரைட்ஸ் கேட்டால் மீம்ஸ் கிரியேட்டர்கள் எல்லாம் என்ன செய்வார்கள் என்று சந்து கேப்பில் ஒருவரை வம்புக்கு இழுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications