அப்படி ஒரு செல்பி போட்ட சீனியர் நடிகை.. நீங்களுமா இப்படி என தலையில் கை வைத்த ரசிகர்கள்!
சென்னை: உள்ளாடை தெரிய செல்பி போட்டோவை ஷேர் செய்த சீனியர் நடிகையை பார்த்து நெட்டிசன்கள் வேதனை பட்டுள்ளனர்.
மதுரையை பூர்விகமாக கொண்டவர் நடிகை கனிகா. 2002ஆம் ஆண்டு வெளியான ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த கனிகா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

பல முகங்கள்
தமிழைக் காட்டிலும் மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள கனிகா முன்னணி நடிகையாகவும் உள்ளார். நடிகை மட்டுமின்றி, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ளார்.

மகனுடன்..
தமிழில் அவ்வப்போது ஒரு சில படங்களில் தலைக்காட்டி வரும் கனிகா, மலையாள சினிமாவில் படு பிஸியாக உள்ளார். இருந்தபோதும் கணவர் மற்றும் மகனுடன் நேரத்தை கழிக்க தவறுவதில்லை. அவ்வப்போது, தனது மகனுடன் இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.

தலையில் கை..
இதனை பார்க்கும் ரசிகர்கள் நீங்கள் அழகான நடிகை மட்டும் அல்ல பொறுப்பான அம்மாவும்தான் என புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கனிகா ஷேர் செய்துள்ள ஒரு போட்டோவை பார்த்த ரசிகர்கள் நீங்களுமா இப்படி என தலையில் கை வைத்துள்ளனர்.

வயிறு வரை தெரிகிறது..
அதாவது நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செல்பியை ஷேர் செய்திருக்கிறார். அதில் அவர் அணிந்திருக்கும் டாப்ஸின் பக்கவாட்டில் செம டீப்பாக ஓபன் உள்ளது. கைக்கு கீழே வயிறு வரை தெரியும்படி ரொம்பவே டீப்பாக உள்ளது.

கண்ணியமாக உடுத்துங்கள்
அதில் அவரது வயிறு இடுப்பு உள்ளாடை என மொத்தமும் தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கனிகா நீங்களும் இப்படி இறங்கி விட்டீர்களே என தலையில் கையை வைத்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் எப்போதும் போல கண்ணியமாகவே உடுத்துங்கள் கனிகா என அட்வைஸ் செய்துள்ளனர்.
Recommended Video

வைரலான போட்டோ
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவரின் மடியில் அமர்ந்தப்படி ஒரு போட்டோவை எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள், செம க்யூட் என வர்ணித்திருந்தனர். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











