நம்பர் ஒன்னா வரணும்னா.. இப்படித்தான் புகை பிடிக்கணுமாம்.. இதெல்லாம் ரொம்ப தப்பு இல்லையா அங்கிதா?
மும்பை: மாடல் அழகியும் வருங்கால பாலிவுட் நடிகையாகும் கனவுடன் கவர் பாடல்களில் நடித்து வரும் அங்கிதா தேவ், கையில் சிகரெட்டுடன் இருக்கும் போட்டோவை போட்டு வைரலாக்கி வருகிறார்.
பார்த்திபன் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால், காருக்குள்ள பொண்ணு, பொண்ணு கையில் சிகரெட், சிகரெட் மேல புகை என்று தான் அடுக்கிக் கொண்டு போக வேண்டும்.
அங்கிதா தேவின் இந்த ஹாட் ஸ்மோக்கிங் புகைப்படத்தை பார்த்த சிலர் ஜொள்ளு விட்டாலும், பலர் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

முன்னழகு தெரிய
மும்பை மாடல் அழகியான அங்கிதா தேவ், தனது அழகான கூந்தலுக்கு வித விதமாக கலர் அடித்துக் கொண்டு ஹாட்டான போட்டோஷூட்களை நடத்தி அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார். சமீபத்தில் ரெட் கலர் கவுனில் தனது முன்னழகு முழுவதும் தெரியும் படி படு கவர்ச்சியாக எடுத்த போட்டோக்களை போட்டு வைரலாக்கி இருந்தார்.

மும்பையில் ஒரு மீரா மிதுன்
இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்காத நிலையில், தன்னைத் தானே பாலிவுட் நடிகை என கூறிக் கொள்கிறார் அங்கிதா தேவ். நம்ம ஊரில் எப்படி தன்னைத் தானே சூப்பர் மாடல் என கூறிக் கொண்டு, அரசுக்கு எதிராக பல கருத்துக்களை உளறி கொட்டி வரும் மீரா மிதுனை போல மும்பையில் இவர் அலம்பல் தாங்கவில்லை.

ஆமா, நான் செக்ஸி தான்
பாலிவுட்டில் சில ஆல்பம் பாடல்களில் ஆடி பாடி நடித்து விட்டு, பாலிவுட்டின் ஹாட் குயின் தான் தான் என தம்பட்டம் அடித்து வரும் அங்கிதா தேவ், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பிகினி புகைப்படங்களையும், உள்ளாடைகளுடன் ஓவர் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு ஆமா, நான் செக்ஸி தான், அது எனக்கு தெரியும் என கேப்ஷனும் கொடுத்து மிரட்டுகிறார்.

கால் எங்க இருக்கு
இந்நிலையில், தற்போது செம செக்ஸியான உடையை அணிந்துக் கொண்டு, பூட்ஸ் போட்ட காலை, ஸ்டியரிங் படு ஸ்டைலாக வைத்தபடி போஸ் கொடுத்துவிட்டு, முதலில் உங்களை நீங்கள் நேசியுங்கள், பின்னர், இந்த உலகமே உங்களை நேசிக்கும் என தத்துவ மழை பொழிந்துள்ளார். ஆனால், நெட்டிசன்களோ இவரது புகைப்படத்தை பார்த்து, கமெண்ட் செக்ஷனில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
Recommended Video

கையில் சிகரெட்
மற்றொரு புகைப்படத்தில், டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு, கையில் சிகரெட் பற்ற வைத்து புகைத்தபடி இருக்கும் போட்டோவை பதிவிட்டு, நம்பர் ஒன்னாக வரவேண்டும் என்றால் கொஞ்சம் ‘ODD' ஆக இருக்க வேண்டும் என கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரது புகைப்படத்தை பார்த்த பலரும், ஸ்மோக்கிங் கில்ஸ் என்றும், சிகரெட் பிடிக்காதீங்க, அது பிடிக்காமே ஹாட்டா தான் இருக்கிங்க என கமெண்ட் செய்து அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











