Just In
- 21 min ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 54 min ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
- 1 hr ago
கதை சொன்ன இயக்கத்துக்கு அப்படி ஷாக் கொடுத்த 'பேபி' ஹீரோயின்.. செம கடுப்பில் படக்குழு!
- 1 hr ago
மீட் பண்ணலாமா.. வேட்டி சட்டையில்.. எவ்ளோ அழகா இருக்காரு.. வைரலாகும் ஆரி அர்ஜுனன் போட்டோ!
Don't Miss!
- News
மகளுக்கு மொட்டை அடித்து கொண்டிருந்தார் அந்த அம்மா.. அப்போதுதான்.. அப்படியே உறைந்து போன மக்கள்!
- Sports
சின்னதா தான் பேசியிருக்கேன்... பெரிய அளவுல மாற்றம்... பிளாக்வுட் பரபர பேட்டி!
- Finance
11 ஆண்டுகளில் இல்லாத அளவு தங்கத்தின் தேவை சரிவு.. மறக்க முடியாத 2020..!
- Automobiles
விரைவில் அறிமுகமாகிறது இந்திய தயாரிப்பு மின்சார கார்... டாடா டிகோர் இவி-க்கே டஃப் கொடுக்கும் மலிவு விலையில்!!
- Lifestyle
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் உங்களுக்கு எப்பவுமே அதிர்ஷ்டம் வராதாம் தெரியுமா?
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதை அப்புறம் பேசலாம்.. முதல்ல முத்தம் கொடுக்குறத நிறுத்துங்க.. பிரபல நடிகருக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்!
சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பிரபல நடிகர் அனைவரையும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பீதியால் உலக நாடுகள் பீதியில் உறைந்து போயுள்ளன. உலகம் முழுக்க இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலக தலைவர்களும், அவர்களின் மனைவிமார்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது.

3 பேர் உயிரிழப்பு
பல நாடுகளும் வெளிநாட்டினர் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கு தடை விதித்து வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 140க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

தீவிர கண்காணிப்பு
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் கல்விக் கூடங்களுக்கு விடுமுறை அறிவித்திருக்கிறது. கோவில்கள், தேவாலயங்கள் பொது இடங்கள் என மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது. வெளி நாடுகளில் இருந்து வரும் மக்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

நடிகர் பேச்சு
கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், கைக் குலுக்குவதை தவிர்க்க வேண்டும், கட்டிப்பிடிக்க கூடாது என மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, கொரோனாவை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். இது இயல்பாக நடக்கும் ஒன்று. மனதை பலப்படுத்திக்கொள்ளுங்கள். மனிதனைக் காப்பாற்ற மனிதன் தான் வருவான்.

அதை நிறுத்துங்க
மேலிருந்து ஒன்று வராது. சொந்த உறவுகளையே தொட்டுப் பேச பயப்படும் இந்த சூழ்நிலையிலும் தொட்டு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு என்னுடைய நன்றி என்று கூறினார். விஜய் சேதுபதியின் இந்த பேச்சை கவனித்த நெட்டிசன்கள் அதையெல்லாம் அப்புறம் பேசிக்கொள்ளலாம் நீங்கள் முதலில் மற்றவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை நிறுத்துங்கள் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

கைகளை குவித்து
பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என உலகத் தலைவர்கள் பலரும் தங்களின் பாரம்பரியமான கைக் குலுக்குவதை கொரோனா பீதியால் தவிர்த்து வருகின்றனர். மாறாக தமிழர் பாரம்பரியப் படி கைகளை குவித்து வணக்கம் தெரிவித்து வருகின்றனர். ஒருவர் மற்றொருவரை தொடுவது மூலம் பரவும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் சேதுபதி தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் மற்றவர்களுக்கு முத்தம் கொடுப்பதை கொஞ்ச நாளைக்கு நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

போட்டோக்கள் வைரல்
நடிகர் விஜய் சேதுபதி, மாஸ்டர் பட ஷுட்டிங்கின் போது ஒளிப்பதிவாளரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் என்றும் அதனை பார்த்து எங்களுக்கு முத்தம் இல்லையா என விஜய் கேட்டதால் நடிகர் விஜய்க்கும் முத்தம் கொடுத்தார் என்றும் தகவல் வெளியானது. விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுக்கும் போட்டோக்களும் வைரலானது.

மாஸ்டர் பட விழா
இதேபோல் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் மற்றும் தனது ரசிகர்கள் சிலருக்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த போட்டோக்களையும் நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி ஷுட்டிங் ஸ்பாட்டில் கொடுத்த முத்தத்தை மாஸ்டர் பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அவரை கட்டிப்பிடித்து திரும்ப கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.