தெலுங்கானா என்கவுன்டருக்கு வாழ்த்து.. வாயை கொடுத்து வாங்கிக்கட்டிய பிரபல நடிகர்!
சென்னை: தெலுங்கானா என்கவுன்டருக்கு வாழ்த்து சொன்ன நடிகர் ஜிவி பிரகாஷை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரும் நேற்று என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் ஆதரவு எழுந்தது.
என்கவுன்டர் நடத்திய போலீசாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அதன்படி இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் என்கவுன்டருக்கு வரவேற்பு தெரிவித்து டிவிட்டியிருந்தார்.

திட்டு
அதனை பார்த்த ரசிகர்கள் சிலர் ஜிவி பிரகாஷின் டிவிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேநேரத்தில் அவர் நடித்த பேச்சுலர் படத்தின் போஸ்டரை ஷேர் செய்து கண்ட மேனிக்கு திட்டி தீர்த்தனர்.
கட்டுப்பாடு முக்கியம்
பெண் பாதுகாப்பை விட ஆண் ௧ட்டுப்பாடு முக்கியம் நண்பா என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
உங்க படத்துல
மகிழ்ச்சி.. ஆனா நீங்களும் உங்க படத்துல பெண்கள ஆபாசம் இல்லாம காமிக்கனும் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
உங்களுக்கு தகுதியில்லை
நீங்கள் அதுபற்றி பேச கொஞ்சம் கூட தகுதி இல்ல என்று தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
அப்புறம் வரலாம்..
முதலில் நீங்கள் அடக்கத்துடன் நடிக்க முயற்சி செய்யுங்கள்.. அப்புறம் பெண்களுக்கு சப்போர்ட் செய்யலாம் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
இதுபோல் தண்டனை..
தமிழ் நாட்டிலும் இது போல் தண்டணை தர பட வேண்டும் என்று கூறுகிறார் இவர்.
ஆபாசம் வேண்டாம்
நடிகர்கள் படத்தில் பின்பற்றினால் நன்றாக இருக்கும் படத்தில் ஆபாச காட்சி வேண்டாம்.
தளபதி படத்திற்கும் சேர்த்துதான் சொல்றேன் எந்த நடிகராக இருந்தாலும் இதை பின்பற்ற வேண்டும்! என்று கூறுகிறார் இவர்.
சமுதாய சீர்கேடுதான்
இந்த மாதிரி புகைப்படம் உங்கள் திரைப்படத்தில் வருவது வருத்தம் அளிக்கிறது அண்ணா, இதுவும் ஒருவகை சமுதாய சீர்கேடு தான், முக்கியமாக இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார் இவர்.
நல்ல படங்களில் நடியுங்கள்
நீங்கள் துணை எல்லாம் நிற்க வேண்டாம் நல்லபடியாக தரமான படங்களை நடித்தால் போதும் என்று கூறுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











