ஃபைனல்ஸையாவது பார்த்துட்டு ஹோஸ்ட் பண்ணுங்க.. கமலுக்கு அட்வைஸ் பண்ணும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் கமலை விளாசியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் ஒரு பெண் போட்டியாளர் வெளியேறப் போவதாக கூறிய கமல் யார் சேவ்வாக வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு ஆண் போட்டியாளர்கள் யாருமே வாயை திறக்கவில்லை. இதனால் கடுப்பான கமல் சிறுப்பிள்ளைத்தனமா இருக்கு என்று சாடினார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைக்கு மரியாதை
ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவரே.. இன்னும் எதுக்கு ஒரு வாரம் வெயிட் பண்றீங்க!... உடனே ஆரி அர்ச்சுனனுக்கு டைட்டிலை கொடுத்து நிகழ்ச்சியை குளோஸ் பண்ணுங்க! ஆரிக்கு டைட்டில் வின்னரை பெற்று கொடுக்க நாங்க அயராது பாடுபடுவோம்! உண்மைக்கு மரியாதை கொடுத்தே ஆகனும்! என பதிவிட்டுள்ளார்.

ஒரு நல்ல வாய்ப்பு
இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த முறை ஒரு நல்ல மனிதரை தேர்ந்தெடுக்க ஒரு நல்ல வாய்ப்பு.. ஆரி அர்ஜூனனுக்கு மட்டும் வாக்களியுங்கள் என கூறியுள்ளார்.

கள்ளம் இல்லா மனசுயா..
கமல் கேள்வியின் போது ஆரி வழக்கமான சிரிப்புடன் இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், எல்லோரும் "உம்"னு இருக்க ஆரி மட்டும் "ஜம்"னு இருக்காரே!.. கள்ளம் இல்லா மனசுயா அது! என புகழ்ந்துள்ளார்.

பார்த்துட்டு ஹோஸ்ட் பண்ணுங்க
இந்த சீசன் முழுக்க கமல் எபிசோடை முழுமையாக பார்க்கவில்லை என்ற விமர்சனம் உள்ள நிலையில் ஃபைனலிலாவது ஒருவாரம் என்ன நடந்தது என்பதை பார்த்துவிட்டு வந்து ஹோஸ்ட் பண்ணுங்க.. இந்த சீசனோட நீங்க ஹோஸ்ட் பண்ணுறத நிறுத்திடுங்க.. இந்த வேலைக்கு நீங்கள் பொறுத்தமானவர் இல்லை என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

பொறாமைப் பிடித்தவர்
மீண்டும் டபுள் எவிக்ஷன் இல்லை. விஜய் டிவி ரம்யாவை ஃபைனல்ஸுக்கு கொண்டு வர ரொம்ப ஆசைப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்றுள்ள போட்டியாளர்களிலேயே ரம்யாதான் விஷம். ரம்யா பாசிட்டிவிட்டி பற்றி பேசுகிறார். ஆனால் வெறுப்பு மற்றும் பொறாமை நிறைந்தவர் கேபிக்கு முன்னால் அவர் வெளியேற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

எங்களுக்கு தெரியுமே..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஷிவானி எவிக்ட்டடு தெரியுமே எங்களுக்கு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அப்படியே ஜெராக்ஸ் பண்ணியபோது
பாலாஜி ஆரியை போன்றே தரையில் அடித்து அழுததை பார்த்த இந்த நெட்டிசன், பல்பு பாலா... ஆரியை அப்படியே ஜெராக்ஸ் பண்ணியபோது எடுத்த படம் இது! என கிண்டலடித்துள்ளார்.

டாஸ்க் குயின்
ஷிவானி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தகவலை அறிந்த இந்த நெட்டிசன், என்னது எங்க மக்கள் தலைவி, டாஸ்க் குயின் உண்மையிலேயே வெளியேற்றப்பட்டாரா என கேட்டுள்ளார்.

பிக்பாஸ் உங்க வேலைதானே
ஆரிக்கு இன்றைய எபிசோடில் போன் கால் வரும் என்று வெளியான தகவலை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் நீதானே வெவ்வேறு பெயரில் ஆரிக்கு போன் பண்றே!... சொல்லுயா.. என கேலி செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











