முதலில் புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்.. அதைப்பற்றி அப்புறம் பேசலாம்.. நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்!

டெல்லி: டெல்லி காற்று மாசு குறித்து கவலை தெரிவித்த நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.

டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளை விடவும் அதிகமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தொழிற்சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

காற்று மாசு

காற்று மாசு

இந்நிலையில் டெல்லியில் அதிகரித்திருக்கும் காற்று மாசு குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா கவலை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாஸ்க்குடன் செல்பி ஒன்றை ஷேர் செய்துள்ள அவர், காற்று மாசால் ஷுட்டிங் செய்வது கடினமாக உள்ளது.

பாதுகாப்பாக இருங்கள்

பாதுகாப்பாக இருங்கள்

இதுபோன்ற நிலைமையில் இங்கு எப்படி வாழ்வது என்று நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. நாம் காற்று சுத்திகரிப்பு மற்றும் முகமூடிகளால் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறோம். வீடு இல்லாதவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என அறிவுரை கூறியிருந்தார்.

டபுள் ஸ்டாண்டர்டுஸ்

டபுள் ஸ்டாண்டர்டுஸ்

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஸ்மோக் பண்ணும் உங்கள் வாய்க்கு மாஸ்க் போட்டது சரிதான் என தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி காற்று மாசு குறித்து உங்களை போன்ற டபுள் ஸ்டாண்டர்டுஸ் பேசக்கூடாது என்றும் கூறிவருகின்றனர்.

புகைப்பிடிக்கும் பழக்கம்

புகைப்பிடிக்கும் பழக்கம்

மேலும் காற்று மாசை பற்றி பேசுவதற்கு முன்பு புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுங்கள் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பலர் காட்டமாக பேசியிருந்தாலும் பெரும்பாலானோர் அவர் நலனில் அக்கறை கொண்டு புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

அண்மையில் பிரியங்கா சோப்ரா தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது குடும்பத்துடன் உட்காந்து அவர் புகைப்பிடித்த போட்டோக்கள் வைரலானது. அப்போதே அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X