அப்பானு கூப்பிட்டது தப்பா? பாவம் சார்.. அழவச்சீட்டிங்களே! மோகன் வைத்யாவுக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை அப்பா என கூப்பிடக்கூடாது என்று கூறிய மோகன் வைத்யாவுக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷன், இலங்கையை சேர்ந்தவர். ஈழத் தமிழரான இவர் நடுத்தரவர்க்க குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் இனிமையாக பழகி வருகிறார். மேலும் அனைவருக்கும் ஆதரவாகவும் இருந்து வருகிறார் தர்ஷன்.

தர்ஷன் கண்ணீர்
இந்நிலையில் ஆசையோடு அப்பா என கூப்பிட்டு வந்த தர்ஷனை இனி என்னை அப்பா என்று கூப்பிடாதே, அங்கிள் என்று கூப்பிடு என காட்டமாக கூறிவிட்டார் மோகன் வைத்யா. இதனை சற்றும் எதிர்பாராத தர்ஷன் கண்ணீர் விடுகிறார்.

மோகன் வைத்யாவுக்கு அட்வைஸ்
இந்த ப்ரமோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனைக்கண்ட நெட்டிசன்கள் மோகன் வைத்யா இப்படி பேசியிருக்கக்கூடாது என அட்வைஸ் செய்துள்ளனர். மேலும் மோகன் வைத்யாவின் பேச்சு காயப்படுத்துகிறது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கண்ணீர் உண்மையானது
எவ்வளவு கடுமையாக! இது காயப்படுத்துகிறது! தர்ஷனின் கண்ணீர் உண்மையானது! நாங்கள் உங்களை நேசிக்கிறோம் தர்ஷன்! என்று கூறுகிறார் இவர்.
அப்பாவியாக தெரியும் தர்ஷன்
அய்யோ அப்பா.. என கூப்பிடும் போது எவ்வளவு அப்பாவியாக தெரிகிறார்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்
அப்பாவாகத்தான் நினைத்துள்ளார்
அவ்... தர்ஷன்.. மோகன் சார் உங்கள் பேச்சு காயப்படுத்துகிறது, நீங்கள் வருத்தப்பட்டபோது உங்களுக்கு மகனாக நான் இருக்கிறேன் என்று கூறினார் தர்ஷன.. ஆனால் நீங்கள் இப்போது இப்படி செய்கிறீர்கள். தர்ஷன் உண்மையில் அப்பாவாகதான் நினைத்துள்ளார். என்கிறார் இந்த நெட்டிசன்.
அது ஒரு தப்பா?
ஓ மை காட் நிஜமாவா? அவருக்கு அப்பா இல்லை அதனால் உங்களை அப்பா என்று அழைத்தார் அது ஒரு தப்பா? எல்லோருக்கும் ஆதரவாய் இருக்கும் தர்ஷனுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன்.. என்கிறார் இவர்.
உங்களோடு இருக்கிறோம்
தர்ஷன் வெளியேயும் சரி உள்ளேயும் சரி நீங்கள் பெரிய மனிதர். கவலை படாதீர்கள் நாங்கள் உங்களோடு இருக்கிறோம்.. என்கிறார் இவர்.
அழ வைக்காதீங்க ப்ளீஸ்
நல்ல பையன் சார். அழ வைக்காதீங்க ப்ளீஸ்.. என்கிறார் இந்த நெட்டிசன்...
பாவம் சார்
அப்பான்னு கூப்பிட்டது தப்பா.. பாவம் சார்.. அழவச்சீட்டிங்களே.. என்கிறார் இந்த நெட்டிசன்
கூப்பிடாதன்னு சொல்லுது
அப்பான்னு கூப்பிட கூட ஆளு இல்லனு சொன்ன அதே வாய் இப்போ அப்பான்னு கூப்பிடாதன்னு சொல்லுது.. என்கிறார் இந்த நெட்டிசன்
காயப்படுத்தியிருக்கக்கூடாது
தர்ஷன் அழுவதை பார்க்க கஷ்டமாக உள்ளது.. மோகன் வைத்யா சார் இதுபோன்ற வார்த்தைகளால் நீங்கள் அவரை அப்படி காயப்படுத்தியிருக்கக்கூடாது.. என்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











