தாலி கூட வாங்காமல் பணம் சேமித்து வைஷ்ணவி என்ன செய்கிறார் தெரியுமா?

By Siva

Recommended Video

பாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி

சென்னை: பிக் பாஸ் பிரபலம் வைஷ்ணவி தனது திருமணத்தை எளிமையாக நடத்தி சேமித்த பணத்தை எதற்காக பயன்படுத்துகிறார் தெரியுமா?

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான வைஷ்ணவி அஞ்சன் என்கிற விமானியை 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் கடந்த 15ம் தேதி சென்னையில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்று பெரும் தொகையை செலவு செய்யவில்லை வைஷ்ணவி.

புடவை

வைஷ்ணவி தனது திருமணத்திற்காக காஞ்சிபுரம் பட்டுப் புடவை, டிசைனர் புடவை, தங்கம் மற்றும் வைர நகைகள் என்று எதுவுமே வாங்கவில்லை. பாட்டியின் புடவையை அணிந்து கவரிங் நகைகள் போட்டு தாலி கட்டாமல் மாலை மட்டும் மாற்றிக் கொண்டார் வைஷ்ணவி. வைஷ்ணவியின் எளிமையை பார்த்து நெட்டிசன்களும், பெண்ணை பெற்றவர்களும் அவருக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

விலங்குகள்

பட்டுப்புடவை வாங்கவில்லை, நகை வாங்கவில்லை, அட தாலி கூட வாங்காமல் வைஷ்ணவி பணத்தை மிச்சப்படுத்தி அப்படி என்ன செய்யப் போகிறார் என்று நினைக்கலாம். திருமணத்தை எளிமையாக நடத்தி சேமித்த பணத்தை விலங்குகள் நலனுக்காக பயன்படுத்தப் போகிறார்களாம் வைஷ்ணவியும், அஞ்சனும்.

நெட்டிசன்கள்

அஞ்சன், வைஷ்ணவி போன்றே அனைவரும் எளிமையாக திருமணம் செய்து கொண்டால் பெண்ணை பெற்றவர்கள் பலர் கடனில் சிக்கித் தவிக்க மாட்டார்கள். ஒரு நாள் கூத்துக்காக பெரிய தொகையை கடன் வாங்கிவிட்டு கஷ்டப்படும் தந்தைகள் வைஷ்ணவி, அஞ்சனை மனதார பாராட்டுகிறார்கள். அதிலும் முக்கியமாக போட்டோகிராபரை அழைத்து வந்து அந்த ஆள் கொடுக்கும் டார்ச்சரை எல்லாம் வைஷ்ணவி சந்திக்கவில்லை. அதற்காகவே அவரை பாராட்டலாம். திருமணத்திற்கு வந்தவர்கள் தான் புகைப்படம் எடுத்துள்ளனர்.

தேனிலவு

திருமணம் முடிந்த பிறகு ஏதாவது ஒரு நாட்டிற்கு சென்று கணவரை கட்டிப்பிடித்துக் கொண்டு தேனிலவு என்ற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்யவில்லை வைஷ்ணவி. மாறாக நாய்க்கு உணவு அளிக்கும் வீடியோவை தான் வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் அவர் எப்படி இருந்தார் என்பது முக்கியம் இல்லை. நிஜ வாழ்க்கையில் அவரின் செயல்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அஞ்சனுடன் சேர்ந்து நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் வைஷ்ணவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X