For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஃபைட் சீன்கள கூட சென்டிமென்ட்...எப்படி வச்சிருக்காரு பாரு...அதான்ய்யா ஹரி ஸ்டைல்

  |

  சென்னை : டைரக்டர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் யானை. கிராமத்து, ஆக்ஷன், சென்டிமென்ட் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு த்ரில்லிங் கலந்தும் இந்த படத்தை எடுத்துள்ளனர்.

  பிரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு, அம்மு அபிராபி, தலைவாசல் விஜய், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை Drumsticks Productions தயாரித்துள்ளது.

  கேஜிஎஃப் படத்தில் கருடன் ரோலில் மிரட்டிய கன்னட நடிகர் ராமச்சந்திர ராஜு, இந்த படத்தின் மூலம் தமிழிலும் வில்லனாக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக யானை படம் உள்ளது.

  Pattampoochi Review: அந்த பட்டாம்பூச்சி செத்தே போச்சு.. ஓடிப்புடிச்சு விளையாடும் சுந்தர்.சி, ஜெய்! Pattampoochi Review: அந்த பட்டாம்பூச்சி செத்தே போச்சு.. ஓடிப்புடிச்சு விளையாடும் சுந்தர்.சி, ஜெய்!

  விக்ரமிற்காக ஒதுங்கி வழிவிட்ட யானை

  விக்ரமிற்காக ஒதுங்கி வழிவிட்ட யானை

  ஜுன் மாதமே யானை படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டு, இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. ஆனால், ஜுன் 3ம் தேதி வெளியான கமலின் விக்ரம் படம் வசூலில் அடித்து நொறுக்கிய வந்ததால், அதற்கு மரியாதை கொடுத்து தங்களின் படத்தை தள்ளி வைப்பதாக கடைசி நிமிடத்தில் படக்குழு அறிவித்தது. கிட்டதட்ட 2 வாரங்கள் ரிலீசை தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

  யானை எப்போ வருது

  யானை எப்போ வருது

  யானை படத்தை ஜுலை 1 ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்த படக்குழு, கமலையும் நேரில் சந்தித்து, விக்ரம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், விக்ரம் படத்திற்காக தாங்கள் யானை ரிலீசை தள்ளி வைப்பதாக கமலிடமும் சொல்லி உள்ளனர். இதற்காக யானை படக்குழுவிற்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார். யானை படம் வெற்றி அடையவும் கமல் வாழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

  யானைக்கு யு/ஏ சான்று

  யானைக்கு யு/ஏ சான்று

  படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், யானை படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்று வழங்கி உள்ளது. யானை படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ சேனல் வாங்கி உள்ளது. இதன் டிஜிட்டல் ஒளிரப்பு உரிமத்தை ஜீ வாங்கி உள்ளது. தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட பிறகு ஜீ 5 ஓடிடி தளத்தில் யானை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. படத்தின் ரிலீசிற்கு பிறகு ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

  ஹரியின் செம சென்டிமென்ட்

  ஹரியின் செம சென்டிமென்ட்

  அருண் விஜய்யின் 33 வது படமாக வெளியாக உள்ள யானை படத்திற்கான ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு ஷாட்டில், கோபத்துடன் ஆவேசமாக ஓடி வரும் அருண் விஜய், காலில் இருக்கும் செருப்பை கழற்றி விட்டு வந்து ஒருவரின் நெஞ்சில் எட்டி உதைப்பதை போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆக்ரோஷமான சண்டை காட்சியில் கூட நுணுக்கமாக யோசித்து, சென்டிமென்ட்டை டைரக்டர் ஹரி வைத்துள்ளதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

  இது தான் ஹரி ஸ்டைல்

  இது தான் ஹரி ஸ்டைல்

  அதாவது இந்த காட்சி நடப்பது ஒரு ரைஸ் மில்லில். அங்கு நெல் உலற வைத்துக் கொண்டிருக்கும் ஒருவரை தான் அருண் விஜய் அடிப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ரைஸ் மில்லுக்குள் செருப்பு போடக் கூடாது. அதுவும் நெல்லை செருப்பு காலால் மிதிக்கக் கூடாது என்பது காலம் காலமாக கிராமத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம். இதன் சீனில் செருப்புடன் வந்து அருண் விஜய் மிதிப்பதை போல் காட்டி இருந்தால் கூட பெரிதாக யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். இருந்தாலும், அந்த இடத்திலும் சென்டிமென்ட் உணர்வுகளை மதிக்க ஹரி எடுத்துக் கொண்டுள்ள கவனம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

  English summary
  Yaanai promo video released today. In this promo, Arun Vijay kick a man after removed his footwear. This scene is in rice mill. So director Hari included the sentiment in this action was appreciated by netizens and fans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X